பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ਡਾ਼ .# 1 i வந்திருக்கிறது. எனக்குத் தெரியாமலே, பச்சை மரத்தில் வேர்க் கறையான் புகுந்தது போல, அது வேலை செய்திருக்கிறது.

நான் இருள் நோக்குவாதி பெஸிமிஸ்ட் ஆக இருந்ததும் இதற்குத் துணைபுரிந்துள்ளது என்று யாராவது சொன்னால், மறுப்பதற்கில்லை. என் மனம் "நல்லது நிகழும் என்று எண்ணுவதே கிடையாது. மோசமான கற்பனைகளைத் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும். -

அவ்வப்போது எங்கள் வட்டாரத்தில் வீடுகள் தீப்பற்றி எரியும். இது சகஜ நிகழ்ச்சி தூரத்தில் நிற்பவர்களின் பார்வைப் புலன்களைத் தாக்கும் விதத்திலே தீ திமுதிமுவெனப் பொங்கிப் படர்ந்து, வான வளையத்துக்குச் செம்மை தடவும். அந்நேரங்களில் எங்காவது அலைகிற என் கண்களும் அதைக் காண நேரிடும். மனம் சித்திரிக்கும் நூற்றுக்கணக்கான வீடுகள் மீது நெருப்பு ஒளிநாட்டியம் பயில்கிறது. எனது வீடும் தீயின் கூத்துக்கு இரையாகியது. நான் ஆசையோடு வாங்கி அடுக்கியுள்ள விலை உயர்ந்த நூல்கள் எல்லாம் தீயில் எரிந்து, சாம்பலாகின்றன. அவற்றிலிருந்து பறந்தெழும் கரித்துணுக்குகள் ஆயிரமாயிரம் பூச்சிகள் போல ஆகாச வீதியிலே மிதக்கின்றன:- இப்படிப் பட்ட காட்சியைக் கண்டு களிக்க நான் வேகமாக வருகிறேன். வீடு முழு உருவத்தோடு நின்று எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. -

நான் ரயிலில் பிரயாணம் செய்கிறேன, இரவு பயங்கரமாகக் கவிழ்ந்து கிடக்கிறது. ரயில் வண்டி தட்தடவென்று பேரோசை செய்கிறது. ஆச்ச விழுந்தாச்சு காட்டாற்றுப் பாலத்திலே தடம் புரண்டு வண்டித் தொடர் விழுகிறது, விழுகிறது. என் மனம் செய்கிற சித்து வேலை தான். வேறு விபத்து எதுவுமில்லை என்று உணர்கிறபோது எனக்கு வருத்தம் ஏற்படுகிறது.

இப்படித் தான் ஒரு சமயம் ரயில் ஆர்யங்காவுக்குப் பக்கத்திலே ஒடிக்கொண்டிருக்கிறது. அந்த பிராந்தியத்தைப் பற்றி உமக்குத் தெரிந்திருக்கலாம். மலைப்பிரதேசம், காட்டு வழி. எங்கு பார்த்தாலும் ஒரே பச்சை மயம்-விதவிதமான மரங்களின் தலைகள். திடுமென்று இருட்டு வண்டியை விழுங்குவது போலிருக்கும். மலையைக் குடைந்து பாதை போட்டிருக்கிறானைய்யா மனுஷன் டன்னல் வழியே வண்டி போகிறபோது எனக்கு பயம் தான். பாறைகளில் நீர்