பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஐ மனப் இாதி |

இரவு மூன்றேகால் மணிக்கு நான் இறங்க வேண்டிய ஸ்டேஷனில் போய் வண்டி நிற்கும். மீதிப் பொழுதை ஸ்டேஷனிலேயே கழித்துவிட்டு, அஞ்சு மணிக்குக் கிளம்புகிற பஸ்ஸில் இடம் பிடிக்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். மோகினி என் பின்னாலேயே இறங்குகிறது. காத்திருக்கிறது. ஸ்டேஷனிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு மைல் தூரம் நடந்து போக வேண்டும். தனி வழி. இருள் நிறைந்த பாதை. அந்த இடத்தில் மோகினி என்னை அடித்துவிடும் என்று நிச்சயமாக எனக்குப்பட்டது. என் செய்வது? நான் என்ன செய்யமுடியும்? என் தேகம் நடுங்கியது. இருள் கவிந்து வந்தது. ரயில் வண்டியின் அழுது வழியும் விளக்கு இருட்டைப் போக்கிவிடவில்லை. நான் ரத்தம் கக்கிக்கொண்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கிற காட்சியை என்மனம் அற்புதத் திறமையோடு படம் பிடித்துக் காட்டுகிறது. வண்டிக்கு வெளியே பார்வையை நிறுத்தவும் முடியாமல், கட்டுடல் பெற்ற முற்றிய முள்ளங்கிக் கிழங்கு மாதிரி புஷ்டியாக இருந்த மஞ்சள் மினுக்கும் வெற்றிலைச் சிவப்பும் கண் கறுப்பும் நிறைந்த முகத்தை உடைய பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாமல் நான் வேதனைப் பட்டேன். அவள் மோகினியேதான் என்ற எண்ணம் என்னைப் படாதபாடு படுத்தியது.

நல்லவேளை அவள் ஏதோ ஒரு ஸ்டேஷனில் இறங்கி இருட்டோடு இருட்டாகிப் போன பிறகுதான் எனக்கு உயிர் வந்தது.

நான்தான் சொல்கிறேனே. உண்மையில் நான் ஒரு கோழை. பந்த சுபாவம் உடையவன்.

இந்த மனநிலை வாழ்வின் அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுத்துவிடும் என்றுதானே சொல்ல விரும்புகிறீர்? அது எனக்கும் நன்றாகத் தெரிகிறது.

ரோட்டில் நடக்கவே பயம் எனக்கு நடு ரோட்டில் நடக்கிறேன். திடீரென்று ஒரு கார் வந்து மோதி என்னைக் கீழே தள்ளி. பெரும் கூட்டம் கூடுகிறது. ஆஸ்பத்திரி.போலீஸ் எல்லாம் பிரமை மனசின் கூத்து. நான் குதித்து ஓடி ரஸ்தாவின் ஓரத்துக்குப் போகிறேன். ஒழுங்காக நடந்து வந்த நான் இப்படித் திடுமெனக் குரங்குத்தனம் பண்ணுவதைக் காண்கிற மற்றவர்கள் "பைத்தியம் போலும்" என்று எண்ணுகிறார்கள், முழிக்கிறார்கள். - -