பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ மனப் பிராந்தி - |

நான் ஒரே இடத்தில் நின்றுவிடுகிறேன். காலம் ஓடுகிறது. என் கால்கள் நிற்கின்றன. இப்பவும் அப்படித்தான்.

இதோ பிசாசுப்பயல் மகன் ஒருத்தன் என்ன போக்குப் போறான் பாரும் எதுக்கய்யா இத்தனை வேகம்? என்ன குடி முழுகிப் போகிற காரியம் கெட்டுவிட்டதாம்? நான் ரோட்டில் குறுக்கே போகிறேன்னு வையும். இது என்மேலே ஏறியிருக்குமா இராதா? நீரே சொல்லுமய்யா,

அதோ அந்தா வாறானே அவங்கப்பன் மகன் சொந்தக் கார் இருந்தால்தான் என்ன? இவ்வளவு ஸ்பீடாகப் போனால்தான் காரிலே போனது போல இருக்குமோ? இல்லே, நான் கேட்கிறேன். நான் நடந்து போயிருந்தால் என் கதி என்ன ஆகியிருக்கும். :

இரும்பு நாகரிகம், இயந்திர நாகரிகம், பெட்ரோல் நாகரிகம் எல்லாம் கூடிக்கொண்டு அடிக்கிற கூத்திலே சாதாரண மனிதனுடைய அன்றாட வாழ்க்கையின் அழகும் அமைதியும் ஆனந்தமும் சிதையுண்டு சின்னா பின்னாப்பட்டுப் போச்சு நான் இவ்வாறுதான் எண்ணுகிறேன்.

சரி, துணிந்தாச்சு ரோடும் கிளியர்னு தோணுது. நான் கடக்கப் போகிறேன். கடந்துவிடுவேன் நண்பரே. -

என்னது? காரா?.எங்கே?

ஸ்கூட்டர்? மோட்டார் பைக்? - தாறுமாறாக மோதும் ஒலிக்கடலின் தறிகெட்ட ஒசை அலைகளில் நான் சிக்கிவிட்டது போல் தோன்றுகிறதே எங்கே இருக்கிறேன்? ஐ.ய்.யோ கட. -

க்றீச்.கிர்ர்ரீச்