பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

琵器_靈 பொம்மைகள் யாரைக் கொண்டிருந்தாள், என்று திட்டமாகச் சொல்வதற்கில்லை. அம்மாவையும் அப்பாவையும் கொண்டு இருந்திருக்கலாம்; அல்லது, குடும்பத்தில் உள்ள வேறு எவரது சாயலையாவது-தனி ஒருவர் சாயலையோ, பலரது சாயல்களின் கூட்டு மொத்தமான କ୍ତ ଓ வார்ப்பையோ-அவள் பெற்றிருந்திருக்கலாம். அது எப்படி யிருந்தாலும் சரி. மூவரிலும் அவள் தான் நல்ல அழகி.

அவளோ-கவிதை போன்ற அச்சிறு பெண்ணை எண்ணும் போது, கவிதை தான் முன் வந்து நிற்கிறது "தாவாச் சிறுமான் மோவா அரும்பு கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு வயது பதின்மூன்று தானிருக்கும்.

பெரியவள் தண்ணித்தட்டு இல்லாமல் வளர்ந்த முருங்கை மரம் மாதிரி நெடு நெடுவென்று உயர்ந்திருந்தாள். நன்றாகச் சாப்பிடாமல், வெறும் காப்பியைக் குடித்தும் "ஐஸ்க்ரீமை"த் தின்றும் வளர்கிற காலேஜ் குமாரிகள் சிலரைப் போலவே அவளும் ஒல்லியாய், ாலும்பும் தோலுமாய்க்காட்சி அளித்தாள். எலும்பு மூட்டுகளும், நரம்பு முடிச்சுகளும் துருத்திக்கொண்டும். பிதுக்கியவாறும் நின்ற அந்த உருவம் “உடற்கூறு சாஸ்திரம்" கற்பிக்க உபயோகப்படக்கூடிய நல்ல எலும்புக்கூடாகத் திகழமுடியும். --

ஆனால் அலங்காரக் கலையிலே அவள் ஒரு அத்தாரிட்டிதான். நாகரிக ஸில்க் புடவைகளின் விளம்பரங்கள் புகழ்பாடுகிற துணிரகங்களை எல்லாம், வேளைக்கு ஒன்றாகச் சுமக்கும் "சீலை மாட்டி துணி ஸ்டாண்ட் ஆக விளங்கும் அவள் உடல் வடநாட்டு சினிமாப் பத்திரிகையின் கலர் படங்கள் காட்டுகிற தலைச் சிங்காரிப்புகள் எல்லாம் அவள் கூந்தலிலும் வரிசைக்கிரமமாகக் குடிபுகும். இன்னும், நாகரிகச் சந்தையில் இறக்குமதியாகும் சகலவிதப் பொருள்களுக்கும்.சரியான உரைகல்லாக மிளிர்ந்தாள் அவள்.

அழகு எனும் அம்சம் அவளிடம் இல்லைதான். ஆயினும் என்ன? உருவம் பெண்ணாக இருந்தால் போதாதா, அபிநவ ரோமியோக்களுக்கு அவள் பின்னால் திரியவும், அவள் வீட்டில் வந்து தவம் கிடக்கவும் அஞ்சாறு "மம்முதர்'கள் இருந்தார்கள். புராணகாலத்து மன்மதன் கிளிமீதா சவாரி செய்தான்? நாகரிக மதன்களுக்கு ஸ்கூட்டரும், மோட்டார் பைக்கும் பெரிதும் துணை புரிகின்றன. ஆகவே, அவள் வீட்டு முன்னாலும் இந்த ரக வாகனம் ஏதாவது ஒன்று காத்து நிற்பது வழக்கமாகிவிட்டது.