பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் - 靈 #19

அவள் பிரபல் கல்லூரியில் படித்துக் Gकाळाएकृत्व அதனால் அவள் அவ்வப்போது உலா போகும் கோலம் வீதியில் நடமாடுவோருக்கு ரசிக்கத் தகுந்த காட்சியாக அமையும்.

இரண்டாவது பெண்ணிடம் அழகுமில்லை; ஆடம்பரமும் இல்லை; தனித்துவமும் கிடையாது. அக்காளை ஒரளவுக்குப் பின்பற்றும் பண்பு பெற்றவள் அவள் எனினும் வண்ணப்பூச்சித் தன்மை இவளிடம் அதிகம் காணப்படுவதில்லை. அடுத்த வீட்டுத் தடி அம்மாளுடன் பேசிப் பொழுது போக்குவதில் தான் இவள் மிகுந்த இன்பம்பெற்றதாகத் தோன்றியது. இவள் அதிகப் படிப்பு படிக்க அவாவியவளாகவும் தோன்றவில்லை.

வீட்டின் முன்புற ரஸ்தாவை அரங்கமாகக் கொண்டு விதம் விதமான நடிப்புகளைச் செய்து காட்டும் அழகுக் கலைஞ"யாக மிளிர்ந்தாள் மூன்றாவது பெண். சைக்கிள் சவாரி செய்து பழகுவதற்கும், ஸ்கிப்பிங் ஆடிக் களிப்பதற்கும். கோலமிட்டுப் பயில்வதற்கும். தன்னையே ஒரு எக்ஸிபிஷனாக மாற்றிக் கொள்வதற்கும் அந்த இடம் அவளுக்கு மிகுதியும் பயன்பட்டது. பள்ளிக்கூடத்துக்குப் போவது அவளுக்குப் பொழுதுபோக்கு: மற்றவை எல்லாம் உற்சாகமளிக்கும் அலுவல்கள். -

சமூகத்தில் சிலருக்கு இனிய பொழுது போக்காகவும்.

உவகையூட்டும் அலுவலாகவும் விளங்கும் "நவராத்திரி வந்தது.

பட்டும் பளபளப்பும் பகட்டும் படாடோபமும் சில வீதிகளிலே பவனி வந்தன. அநேக வீடுகளை முற்றுகையிட்டன.

ரோட்டோரத்து அந்த விடும் அற்புத உலகமாக மாறியிருந்தது. அம் மூன்று பெண்களும் அதிவிசேஷ மேனாமினுக்கிகளாகக் காட்சி தரலானார்கள்.

தனி ஒருவன் வசதியாக வாழ்வதற்கே போதுமான வாய்ப்புகள் கிட்டாத சமுதாயத்தில் - கணவனும் மனைவியும் வயிறாற உண்டு திருப்திகரமாக உடுத்தி, செளகரியமாகத் தங்கி மகிழ்வதற்குக் கூட வசதிகள் இல்லாத நாட்டில் - ஒரு குழந்தையைக் கூட நல்ல போஷாக்குடன் வளர்க்க முடியாமல் திணறுகிற குடும்பங்கள் நிறைந்த இடத்தில்-ஒரு நாளைக்கு ஒன்பது விதமாக அலங்கரித்துக் கொள்ளும் ஒய்யாரிகளுக்கு அழகழகான ஆடைகளும், ஆடம்பர