பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#22 பொம்மைகள் |

அந்த அழகான குழந்தைக்கு ஏதோ வியாதி வந்தது. அது மெலி ந்துவிட்டது. டாக்டர் ஒரு டானிக் பெயரை எழுதிக் கொடுத்தார். அந்தச் சமயத்தில் அவனிடம் ஆறேகால் ரூபாய் இல்லை. இத் தொகையைப் புரட்டிக் கொண்டு மீண்டும் அவன் மருந்துக் கடையை அடைவதற்கு நாலைந்து நாட்களாயின. வந்து விசாரித்தான். அதே மருந்தின் விலை மேலும் ஒரு ரூபாய் அதிகமாகியிருந்தது. ஒரு ரூபா. நூறு நயா பைசாக்கள். எங்கே போவது, குழந்தையை எப்படிக் காப்பாற்றுவது. இந்தக் கவலை அவனை அரித்துக் கொண்டிருந்தபோதுதான் பொம்மை விலையைப் பற்றி அலட்சியமாகப் பேசிய அலங்காரியின் சிரிப்பு அவன் காதுகளை அறுத்தது. அவன் உயிர்த்த பெருமூச்சு வெறும் காற்றில் தான் கலந்தது.

"நவராத்திரி"யின் ஐந்தாம் நாள்.

அந்தி நேரம். இரண்டாவது பெண், வர்ணமயமாய் பூத்துக் குலுங்கும் வண்ணச் செடிபோல், வாசல் படியில் நின்றாள். பக்கத்து வீட்டுத் தடிஅம்மாள் அவளைப் பார்த்துப் புன்னகை பூத்தாள். - துவளும் கண்ணாடித்துணியென யுவதியின் உடம்பில் ஒட்டிக் கிடந்தது நாகரிக வ்ெண்துகில் உள்ளே கட்டியிருந்த பூவேலைப்பாடுகள் பெற்ற - பச்சை நிறப் பாவாடையையும், ஜாக்கெட்டையும், இரண்டுக்கும் இடைப்பட்ட வயிற்றுப் பகுதியையும் பளிச்சென எடுத்துக் காட்டப் பயன்பட்டது. அச்சீலை.

"புதுசா?" என்றாள் பெரியம்மாள். 'உம்' என்த் தலையசைத்தாள் ஒய்யாரி. "என்ன விலை?" - "எழுபத்தெட்டு ரூபா. இன்னொண்ணு பார்த்தேன். இதைவிட நைஸாக இருக்கும். டிஸைனும் வேறே மாதிரி. தொண்ணுத்திரண்டு. ரூபா சொன்னான். தீபாவளிக்குப் பார்த்துக்கிடலாம்னு அம்மா சொன்னா. சரிதான்னு இருந்துட்டேன்." - -

"அக்காளுக்கும் எடுத்திருக்குதா?" "அவ இப்ப வேண்டாம்னு சொல்லிட்டா போன வாரம் தான் அவள் ஒரு ஸேரி வாங்கினா. நீங்க கூடப் பார்க்கலே? ரொம்ப