பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


124 து து பொம்மைகள் –

அழகற்ற குழந்தைதான். ஆயினும், விளையாடும் துடிப்பும் வேடிக்கை பார்க்கும் ஆசையும் இல்லாமலா போய்விடும்?

"சீ போ' என்று எரிந்து விழுந்தாள் மோகினி, "ஒரு தரம் எட்டிப் பார்த்து விட்டுப் போயிடுறேன்."

"தரித்ரம் போடி இங்கேருந்து. பீடை, இதும் மூஞ்சியைப் பார்த்தியா இதுக்கு கொலுவேறே பார்க்கணுமாம்.போடின்னா.போ..."

இதற்குள் ஒரு கார் வந்துவிட்டது. அதிலிருந்து, பகட்டும் மினுக்கும் ஆடம்பரமும் அலங்காரமும் ஒரு பட்டாளம் போல் கிளம்பி வந்தன. -

மோகினி நாட்டிய பாவத்தோடு கை கூப்பி, தலையசைத்து, விழி சுழற்றி "வாங்க வாங்க" என்று கூறி, கலகலவெனச் சிரித்தாள். வந்தவர்கள் பார்வை அழுக்குப் பிடித்த சிறுமி பக்கம் பாயவே இல்லை.

தேவையற்ற கல்லும் மண்ணும் பார்வையில் படாததுபோல் தான் இதுவும் பகட்டுச் சிறுமியும் பிறகு அந்த தரித்திரத்தைப் பற்றி நினைக்கவே யில்லை. -

பொம்மை வைத்து விளையாடுகிறவர்களும் சமூகத்தின் மேல் தட்டிலே பகட்டாக விளங்குகிற பொம்மைகள்தான். அவர்களுக்கு உயிர் இருக்கிறதே தவிர, நியாயமான உணர்வுகளும் இல்லை, மனித இதயமும் இல்லைதான்.

ஏழைச் சிறுமி இப்படி நினைக்கவில்லை. அது மட்டுமென்ன? சமுதாயத்தின் முக்கால்வாசிப் பேர் இதைப்பற்றி எண்ணவே யில்லையே, இன்னும்