பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


126 கொடிது, கொடிது | வரும்போல்தானிருந்தது. ஆயினும் அவன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.

"சீ போடா!" என்று பாலுவைச் சீறினான் ஆத்ம கிருஷ்ணன். "நான் சும்மா சொன்னேன்" என்று பாலு இழுத்தான்.

விளையாட்டில் வெற்றிபெற்ற தாமோதரன் மிட்டாய் வாங்கி வந்தான். எல்லோருக்கும் கொடுத்தான். முருகையாவின் மனம் ஆசைப்பட்டது. அவன் கை முன்னே நீளத் தயங்கியது. ஊம். சும்மா வாங்கிக்கொள், முருகா. பாலு சொன்னானே என்பதற்காக வருத்தப்படுகிறாயா?" என்றான் தாமு.

“ஊகுங். எனக்கு வேண்டாம்" என்று தயங்கித்தயங்கிச் சொன்னான் முருகையா.

முடிவில் அவனும் வாங்கிக் கொண்டான், ஆசை அடங்கி ஒடுங்கிவிட இசைந்தாலும், மற்றப் பையன்கள் அவனை சும்மா விட்டுவிடுவார்களா?

அன்று முதல் அது வழக்கமாக வளரலாயிற்று. விளையாட்டில் வெற்றிபெறுகிறவன் எல்லோருக்கும் தின்பண்டம் "சப்ளை" செய்ய வேண்டும் என்று ஒரு விதி செய்தார்கள். அதை ஒவ்வொரு நாளும் காப்பாற்றினார்கள்.

சுந்தரம் பாண்டி விளையாட்டில் ஜெயித்தபோது "பெப்பர் மிண்ட் வாங்கிக் கொடுத்தான். பெரிய வீட்டுப் பையனான பாலு அனைவருக்கும் சாக்லெட் சப்ளை பண்ணினான். ஒருவன் வேர்க் கடலை வாங்கித் தந்தான். இப்படி நாள்தோறும் எல்லோருக்கும் ஏதாவது தின்பண்டம் கிடைத்து வந்தது.

முருகையாவும் சின்னப் பையன்தானே! விதம் விதமான பண்டங்களைத் தின்னவேண்டும் என்கிற ஆசை அவனுக்கும் இருந்தது. வீட்டில் கேட்டால் காசு கிடைக்காது. விளையாட்டிலோ ஆடிக்களிக்கும் இன்பமும் கிட்டியது. தின்பண்டமும் கிடைத்தது ஆகவே அவனுக்கு மகிழ்ச்சிதான். . . . . -

“ஏ ஏய் ஒரு விஷயம் கவனித்தாயா? முருகையா தினம் தோற்றுக் கொண்டே இருக்கிறான். ஜெயிக்காமல் இருப்பதற்கு அவன் பாடுபடுவதாகவே தோன்றுகிறது' என்று ஒருநாள். ஆத்மகிருஷ்ணன் குறிப்பிட்டான். -