பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ஐ கொடிது, கொடிது " ஆகிவிடுவாரு அதுக்கு வேண்டிய முயற்சிகளை செய்வாரு" என்று கேலி பேசினான் பாலுவின் தோழன்.

இவ்விதம் பேசிப் பேசி வம்புச் சண்டை வளர்த்து விட்டார்கள் அவர்கள்.

"ஏ எச்சிப் பொறுக்கி" என்றான் பாலு

"ஒட்டுப் பொறுக்கி நட்டுவாக்காலி என்று பள்ளிக்கூடத்து வாய்ப்பாட்டு ராகத்திலே நீட்டி இழுத்தான் அவன் தோழன்.

முருகையாவும் என்னவோ சொல்ல, சிலர் அவன் முதுகைப் "பதம் பார்த்து" அனுப்பி வைத்தார்கள். அவன் அழுது கொண்டே போனான். -

அவன்பட்ட அடிகள் அவனுடைய உள்ளத்தைச் சுடவில்லை. அவர்களுடைய குற்றச்சாட்டின் உண்மைதான் அவன் மனசை வாட்டியது. அவன் குடும்ப நிலைமை அவனது உள்ளத்தைத் தகித்தது. முருகையாவின் தந்தை பலவேசம்பிள்ளைக்குப் பணம் என்கிற விஷயம் எப்பொழுதும் துரத்துப் பச்சையாகவே இருந்தது. அவரும் ஏதேதோ தொழில்கள் செய்து பார்த்தார். ஒடி ஆடி முயற்சி செய்தார். வஞ்சனை இல்லாம்ல் உழைத்து வந்தார். கிடைக்கிற காசு சாப்பாட்டுச் செலவுக்குக்கூடப் பற்றாமல் தானிருந்தது. சில தினங்களில் அவர்கள் வீட்டு அடுப்பு புகையாமலே இருந்து விடுவதும் உண்டு அன்றைக்கு வெறும் பொரி கடலையைத் தின்று தண்ணீரையும் குடித்து வயிற்றை ரொப்பிக் கொள்வார்கள்" அவர்கள். பல நாட்களில், "சோறு கண்ட மூளி யார், சொல்" என்று கோயில் சிலையைப் பார்த்துக் கேட்ட கவிராயனுக்குப் பக்க பாட்டுப் பாடக்கூடிய அந்தஸ்து பெற்றவர்களாகத்தான் இருந்தனர் அக் குடும்பத்தினர். -

"கொடிது கொடிது வறுமை கொடிது" என்கிற ஏட்டுப்படிப்பின் உண்மையை நாள்தோறும் நன்கு உணர்ந்து வந்தான் முருகையா. அறியாத வயசில் அவன் அழுது அடம்பிடித்துத் தன் ஆசைகளை நிறைவேற்ற முயன்றான். ஆசாபங்கத்துடன் அறைகளும்தான் அவன் பெற்ற பலன்கள்ாகும். நாளாக ஆக அவனும் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை நிலையை உணர்ந்து கொண்டான். அதற்கேற்ப நடந்துகொள்ளும் சாமர்த்தியம் அவனுக்கு இருந்தது. இயல்பாகவே அவன் நல்ல புத்திசாலிதான்.