பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|வல்லிக்கண்ணன் s #33 ஒளி வீசும் மணிகள்போல் மினுமினுக்கும் கண்கள். அவன்ை உற்று நோக்கியவாறிருந்தன. அக்கண்கள் பொதிந்த தலை பெரிதாய், விகாரமாய், வெறுப்பு ஏற்படுத்துவதாய், ஒருவித பயமும் தருவதாய் இருந்தது. அதற்கேற்ற உடல் அதில் முளைத்தெழுந்த எட்டுக்கால்கள் - உடலைவிடப் பெரியனவாய் அதன் வேக இயக்கத்துக்குக் துணை புரிவனவாய். -

"ஐயோ, சிலந்திப்பூச்சி" என்று அலறியது அவன் மனம், "ஐயய்யோ நம்ம மேலே ஏறிவிடும் போல் தோணுதே என்று பதறியது.

அவன் விழித்து அலறியடித்துக் கொண்டு எழுந்தான். அவன் உடல் மீது பூச்சி வேகமாக ஓடுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. கையினால் தடவித் தள்ளினான். துடித்து எழுந்து, ஸ்விச்சைத் தட்டினான். -

இரவின் ஆழத்தில் - கிணற்றில் விழும் கல் 'டுபுக்கென ஒலி எழுப்புவதுபோல் - அது கனத்த ஓசை எழுப்பியது. ஒளியைக் கொட்டி எங்கும் பூசியது சிறு "பல்ப்" -

கண்களைக் கூச வைத்த அவ் வொளி வெள்ளத்திலே കൂഖ് அதைக் கண்டான். சுவரோடு தரை கூடும் இடத்தில் - சுவரோடு சுவராய், தரையோடு தரையாய் அது ஒண்டியிருந்தது. பெரிய சிலந்திப் பூச்சி. நன்கு வளர்ந்து தடித்தது. அழுக்கு முட்டிய ஏதோ ஒரு உருண்டை போல, அருவருப்பு தரும் உடல், அதன் மீதுள்ள ரோமங்களும் புள்ளிகளும் அவன் பார்வையை உறுத்தின. அதன் கண்கள் விளக்கொளியில் மினுமினுத்தன.

அப்படியே அந்தப் பூச்சியை நசுக்கிக் கொல்லவேண்டும் என்று துடித்தது அவன் உள்ளம். ஆனால், வெறும் பாதத்தினால் அதை மிதித்து நசுக்க அஞ்சினான் அவன். பழந்துணியையோ, செருப்பையோ தேடித் திரிந்தன அவன் விழிகள்.

அவன் செருப்பை எடுத்து வருவதற்குள் அந்த எட்டுக்கால் பூச்சி வேறு இடத்துக்கு ஓடியிருந்தது. அவன் கண்கள் அதைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டன.

சிலந்தி சுவர்களின் ஒரு மூலையில் தர்ை ஒரத்தில் பதுங்கி யிருந்தது.