பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனினும், அவன் உள்ளத்தில் சிலந்தி தனியொருஇடம் பெற்று நின்றது. நினைவாக வளர்ந்து அரித்துக் கொண்டிருந்தது. கனவிலும், நுண்ணிய இழைகளை ஒடவிட்டு வலை பின்னி அவன் மூளையில் பதிய வைத்தது. பித்தாய், பேயாய், படுத்தி வந்தது. கோளாறாய், குணக்கேடாய், வளர்ந்து அவனை ஆட்டிப் படைத்தது.

சிறு சிறு பூச்சிகளிலிருந்து பென்னம் பெரிய சிலந்திகள் வரை, பலரகமான பூச்சிகள் சதா அவன் நினைவில் ஊர்ந்து கொண்டிருந்தன. எப்பவாவது பூச்சி கடித்தாலும் கூட சிலந்தி தான் கடித்திருக்கும் என்று நம்பி அவன் கஷ்டப்படுவது வழக்கம். "காணாக்கடி"யாக ஏதாவது அவனை அடிக்கடி கடித்துக்கொண்டு தானிருந்தது. தேகத்தில் அங்குமிங்கும் அரிப்பும், கழுத்துப் பக்கத்திலும் மூக்கோரத்திலும் கண் இமைகள் மீதும் முதுகிலும் வட்டங்களாகவும் புள்ளிகளாகவும் பற்று வருவது போவதாகவும் இருந்தன. -

அவனைக் கடிக்காத வேளைகளில்கூட சிதம்பரத்தின் மனம் சிலந்தி பூச்சிகளைத் தேடித் திரிந்தது. அவன் நினைவு அந்தப் பூச்சியைச் சுற்றியே வலைபரப்பியது. எங்கோ எப்போதோ படித்ததன் நினைவு அவன் தூக்கத்திலே கனவாய், பயங்கரமாய் நிழலாடுவது முண்டு. - -

- ஆப்பிரிக்காவிலோ, அல்லது வேறு எங்கோ, ஒருவகைச் சிலந்தி உண்டு. மனிதர் கீழே படுத்துத் தூங்கும்போது அந்தப் பூச்சி வந்து அவர்கள் தலைமீது ஊர்ந்து. மயிர் முழுவதையும் கத்திரித்துவிடும். அது அப்படிச் செய்வது, படுத்துத் தூங்கு கிறவனுக்குத் தெரியாது. அவன் விழித்தெழுந்த பிறகுதான், தனது தலைமொட்டையாகியிருப்பதை உணர முடியும்.

இதை அவன் ஒரு பத்திரிகையில் படித்தது முதல் இச்செய்தியால் பித்துற்றான். அந்த ரகச் சிலந்தி மனிதர்கள் தலைமுடியை மட்டும் தான் கத்திரிகிக்குமா அல்லது. மயிர் அடர்ந்த உடல் பெற்ற பிராணிகள் மீதும் ஊர்ந்து தனது வேலையைக் காட்டுமா? அவன் அறிவு இவ்வாறு குரல் கொடுத்தாலும் கூட இச் சந்தேகத்தை விட அவனது விசித்திர உணர்வே அதிக வலிமை பெற்று மேலோங்கியது. -

தூக்கத்தில் அவன் கை தலையைத் தடவிப் பார்த்துக கொள்ளும். இரவில் இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் -