பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


_சிலந்தி - சிதம்பரம் அன்றாட அலுவல்களை ஒழுங்காகத் தான் செய்த வந்தான். "முக்கியமான வேலை" என்று எதையும் செய்ய வேண்டிய அவசியம் அவனுக்குக் கிடையாது. வாழ்க்கை வசதிகள் பலவும் இருந்தன. ஆகவே, சோம்பியிருக்கவும், வீண் எண்ணங்களை வளர்க்கவும் நேரம் நிறையவே கிடைத்தது. அத்தகைய வேளைகளில் அவன் மனம் அடிக்கடி சிலந்தியைச் சுற்றியே நூல் ஓடவிட்டு, தான் பின்னிய வலையில் தானே சிக்கிச் சுழன்று. எண்ணச் சிக்கலை அதிகமாக்கிக்கொண்டு குழம்பித் தவிக்கும். -

இந்த உலகத்திலேயே தனது முதல் விரோதி சிலந்திப் பூச்சிதான் என்றும், கண்ட போதெல்லாம் அந்த இனப்பூச்சியை நசுக்கிக் கொல்ல வேண்டும் என்றும் தவித்தான் அவன். அந்த இனத்தை அவன் அடியோடு ஒழித்துக் கட்டிவிட முடியாது என்றும், அவனுக்கு அந்தப் பூச்சியினால் தான் மரணம் சம்பவிக்கும் என்றும் அவன் உள்ளம் அடிக்கடி அவனுக்கு நினைவு படுத்திக் கொண்டிருந்தது.

சில சமயங்களில் அந்தப் பூச்சி சிலந்திஇனப்பூச்சிகளில் எதுவாவது ஒன்று - அவன் கண்களைக் கவர்ந்து மனசை வசீகரித்து, வியந்து நிற்கும்படி செய்துவிடும்.

ஒரு தடவை சிதம்பரம் ரஸ்தாவில் நடந்துகொண்டிருந்தான். இருபுறமும் மரங்கள் ஓங்கி வளர்ந்த பாட்டை மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்த சருகுகளும், பழுப்புகளும், காய்களும், பூக்களும் எங்கும் சிதறிக் கிடந்தன. அவை இன்னும் உதிர்ந்து கொண்டிருந்தன. திடீரென்று அவன் முன்னே, காலுக்கு அருகிலேயே, "டப்' என்று எதுவோ விழுந்தது. வேப்பம் பழமாக இருக்கும் என்று அவன் எண்ணினான்.

மேலே கவிந்து நின்ற வேப்ப மரத்திலிருந்துதான் أبيوكي விழுந்தது. ஆனால் அவன் ஏமாற்றமும் வியப்பும் ஒருங்கே அடைய நேர்ந்தது. வேப்பம் பழம் போல் உருண்டையாக இருந்தது அது. வெண்மையும் பசுமையும், சிறிது மிஞ்சள் நிறமும் கலந்த உடலும், பசிய குச்சிகள் போன்ற கால்களும் பெற்ற சிலந்திப் பூச்கியாக இயங்கியது. நகர்ந்தது. அவன் காலை நோக்கி ஓடிவர முயன்றது.