பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18

பெரிய மனசு

| - அந்தச் சிறு உருவப் பெண் ஒரு அதிசயம் என்றே

எனக்குத் தோன்றுகிறது. -

மிஞ்சி மிஞ்சிப் போனால் அதற்கு வயசு ஆறு அல்லது ஆறரைதான் இருக்கும். அந்த வயசுக்கு ஏற்ற வளர்ச்சிகூடப் பெற்றிருக்கவில்லை அதன் உடல் "கத்தரிக் காய்க்குக் காலும் கையும் முளைத்த மாதிரி" என்பார்களே. அதை விளக்குவதற்கு ஏற்ற உயிருள்ள உதாரணமாக ஒடியாடித் திரியும் அந்தக் குழந்தையின் பெயர் என்னவோ-எனக்குத் தெரியாது. -

நாகரிக யுகத்தின் தவிர்க்க முடியாத பரிணாமங்களில் ஒன்று ஒட்டல்களை நம்பி உயிர்வாழும் பிராணிகள் இனம் அந்த இனத்தைச் சேர்ந்த எனக்கு இந்த நகரத்தின் எத்தனையோ 'ஓட்டல்"களைத் தெரியும், அந்த ஒட்டல்களில் உள்ளவர்களுக்கும் என்னைத் தெரியும்.

தெரியும் என்றால் என்ன அடிக்கடி ஆஜர் ஆகி மறைகிற ஒரு முகம் என்ற அளவுக்கு அறிமுகம் ஆகியிருப்பது தவிர, நான் யார் என் தொழில் என்ன எனது மாத வருமானம் எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் எதுவும் யாருக்கும் தெரியாது. அதே ரீதியில்தான் அந்தச் சிறுமியும் எனக்கு அறிமுகம் ஆகியிருந்தது.

அதற்கும் என்னைத் தெரியும். அதாவது, எந்த இடத்தில் கண்டாலும், கண்களில் சுடரொளி மின்ன. முகம் நன்கு மலர்ச்சியுற, வெண்பற்கள் தெரிய, களங்கமற்றுச் சிரிப்பு வழங்கத் துணைபுரிகிற அளவுக்கு எனது தோற்றம் அச்சிறுமிக்குப் பழக்கப்பட்டு விட்டது. அது