பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்- 1ሩ!! 鑿,145 "திரவ பதார்த்தமும் இல்லாமல் திடபதார்த்தமும் அல்லாத அதாவது, பால் மாதிரியோ வெண்ணெய் மாதிரியோ இராமல்."

ஒரு சிறுமியிடம் பேசுகிறேன் என்ற நினைவு உறுத்தவே நான் பேச்சை நிறுத்திவிட்டேன். என் குறைபாடுகளில் இதுவும் ஒன்று. சில சமயங்களில் சில விஷயங்களைப் பற்றி சில பேரிடம், புரியும்படியாக மிகத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாமல் நான் திணற நேரிடும்.

அது என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றது. "அதெல்லாம் ஏன் நீ என்கூட ஒட்டலுக்கு வா. உனக்கு வேண்டிய ஸ்வீட்டு வாங்கித் தாறேன்" என்றேன்.

"ஐயோ, எனக்கு வெட்கமா இருக்குமே உன்கூட நான் எப்படி வர முடியும்?" என்று நாணிக் கோணி, தலையைச் சாய்த்துக் கொண்டு அச்சிறு பெண் கூறியது மிகவும் ரசிக்கக்கூடிய காட்சியாக அமைந்தது. என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அதுவும் சேர்ந்து சிரித்தது. "சரி, நீ வரவேண்டாம். உனக்கு மிட்டாய் வேண்டுமா?" என்று

கேட்டேன். - - -

"இப்ப எதுக்கு மிட்டாயி?" என்று சவால் விடுத்தது அது. "காசு வேணுமா? ஒரணா தாறேன்", "ஏன் எனக்கு உன் காசு? என்று கேட்டுவிட்டு அது ஓடியது. இது வேடிக்கையான குழந்தை தான் என்று நினைத்தேன் நான். அதன் பிறகும் அவ்வப்போது அது என் பார்வையில் பட்டுக் கொண்டுதானிருந்தது. சிரித்தது. ஏதாவது பேசும் பேசாமலே போனாலும் போய்விடும் - இதற்கெல்லாம் ஒரு திட்டம்.நியதி என்று எதுவுமே கிடையாது.

ஒரு நாள். - - அந்தச் சிறுமி ஒட்டலில் அலமாரி அருகே நின்று வழக்கமான விசாரணையில் ஈடுபட்டது.

"அதோ அது என்னா?"