பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வல்லிக்கண்ணன் o #47

அவள் அழுதுகொண்டே இருந்தாள். பயமும் பசியும் அவள் உடலில் நடுக்கம் ஏற்படுத்தியிருந்தன. "ஐயோ.பசிக்குதே' என்று விம்மினாள்.

பெரியவர்கள் போதித்தார்கள். அனுதாபப்பட்டபடி போனார்கள் சிலர் கவனியாமலே நடந்தார்கள் பல பேர். இரண்டொருவர் காலணாவும் அரையனாவும் கொடுத்தார்கள்.

நொண்டிப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் இதயத்திலே என்னென்ன நாதங்கள் எழுந்தனவோ அந்த அபலையின் அழுகுரல் ஆனந்தியின் உள்ளத்தில் எந்த உணர்ச்சியைத் தொட்டதோ சட்டென்று முன்வந்து அக்குழந்தை தன் கையிலிருந்த மூன்று காசுகளையும் நொண்டிப் பெண் கையில் திணித்தது. சிரித்தபடி ஒட்டம் பிடித்தது. அதன் முகத்தில் இயல்பான மலர்ச்சி, அதன் கால்களில் பழைய குதிப்பு

என் உள்ளத்திலே ஒரு சிலிர்ப்பு பிறந்தது. சிறு உருவத்தினுள் உறைந்துள்ள பெரிய மனதை எண்ண எண்ண எனக்கு வியப்பு தான் ஏற்பட்டது. பெரிய உருவமும் சிறு உள்ளமும் - பருத்த உடலும் தடித்த அறிவும் - பெற்றவர்கள் மிகுந்துள்ள மனித குலத்தில் அபூர்வமாய், அதிசயமாய், ஆனந்த சொரூபமாய்த் திகழ்ந்த அச் சின்னஞ்சிறு பெண்ணைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்று எண்ணினேன். - -

ஆனால்.ஆனால்.சமூக தர்மங்கள், நாகரிக வழக்கங்கள். பண்பாடு அது இது என்ற பெயரால் எத்தனையோ வேலிகள் கட்டிப் பாதுகாக்கப்பட்டு வருகிற போலிக் கெளரவத்தைப் போற்றும் மனிதப் பிராணிகளிலே நானும் ஒருவன் அல்லனோ ஆகவே, செயல்படமுடியாத எத்தனை எத்தனையோ எண்ணங்களைப் போலவே இந்த நினைப்பும் பிறந்த உடனேயே மக்கி மடிந்தது.