பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ இ படிப்பும் பதவியும்

அறம் வளர்த்த நாதர் புன்னகை பூத்தார். நீ என்னிடம் இஞ்லீசு பேசணும்கிற அவசியமே கிடையாது. என் செக்ரடரி எனக்காக மற்றவர்களிடம் இஞ்லீசில் பேசினால் போதும்" என்றார். அவன் பெயர், ஊர். உறவுப் பெரியவர்கள் பற்றி எல்லாம் விசாரித்தார். திடீரென்று, "எனக்குக் காரியதரிசியாக வேலை பார்ப்பதனால், என்னென்ன செய்யனுமின்னு உனக்குத் தெரியுமா? அந்தப் பொறுப்பை சரியாக நிர்வகிக்க முடியும்கிற நம்பிக்கை உனக்கு இருக்குதா?" என்று கேட்டார்.

"ஒரு செக்ரடரிக்கு என்னென்ன கடமைகள் உண்டோ அவற்றை எல்லாம் செய்யத் தயாராக இருக்கிறேன். கடிதங்கள் எழுதுவது, செய்யவேண்டிய அலுவல்கள் பற்றி நினைவு படுத்துவது, பார்க்க வருகிறவர்களுக்கு."

ப்சா என்று கையசைத்தார் தலைவர். அதெல்லாம் சரிதாம்பா, அவை தவிர முக்கியமான சில டுட்டிகளும் உண்டு" என்றார். சிறிது நேரம் மெளனமாக இருந்தார். பிறகு கேட்டார். ஆங்கிலத்தில் உள்ளது . எதையும் தமிழாக்க முடியுமா உன்னாலே?" -

'முடியும் ஸ்ார். பல கதை கட்டுரைகளை நான் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்."

"தினசரி பத்திரிகைகள் படிக்கிறது உண்டுமா?"

"மேலோட்டமாகப் பார்ப்பது வழக்கம். ஒன்று விடாமல் செய்திகள் பூராவையும் நான் படிப்பதில்லை". .

"நீ ஹிண்டு பேப்பரை வரி விடாமல் படிக்கணும். அதில் வருவதில் முக்கியமானவற்றை எனக்குச் சொல்லணும் என்னைப்பற்றி எந்த இங்லிசுப் பேப்பர்லே என்ன வந்தாலும் சரி, அவைகளை என் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு, எழுத்துவிடாமல் தமிழாக்கித் தரணும். உணக்கு ஞாபகசக்தி அதிகம் இருக்கணும். நான் எங்கே எப்போது என்ன பேசினேன் என்பதை நீ நினைவில் வைத்திருக்கனும் நான் மறந்துவிட்டால் நீ ஞாபகப் படுத்தவேண்டும். சில சமயங்களிலே நான் வேணுமென்றே மறந்து போகிற விஷயங்களும் உண்டு. அவற்றை நீ சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு ஞாபகப் படுத்த முன்வரக்கூடாது. உதாரணமாக, நம்ம கட்சி அரசியல் கட்சி என்று சில சமயங்களில் எழுதியிருப்பேன். பேசியுமிருப்பேன்.