பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[೧ಿಖಿà೯೯೯೯೯; 圈_圈 s] அவசியம் ஏற்படுகிறபோது, நம்ம கட்சி அரசியல் அடிப்படையில் உள்ள கட்சி அல்ல; அது வெறும் கலாசார அமைப்பேயாகும் என்று சொல்லுவேன். ஆனால், மாற்றுக் கட்சிக்காரர்கள் இப்படியெல்லாம் சொல்ஜாலம் பண்ணினால் அதைக் கண்டிக்கத் தயாராவேன். இதுகளை எல்லாம் கவனிச்சு அதுக்குத் தக்கபடி நடந்து கொள்ளணும். என்ன, தெரியுதா?" என்று கேட்டு இளையவனின் முகத்தை நோக்கினார் பெரியவர். -

'உம்ம்" என்று இழுத்தான் அவன்.

"எனக்கு பிரசங்க விஷயங்கள் தயாரித்துக் கொடுக்கவேண்டிய பொறுப்பும் உனக்கு உண்டு. அரசியல், பொருளாதாரம், கலை. இலக்கியம், சமூகம் சம்பந்தமான நல்ல நூல்களை எல்லாம் நீ படிக்கணும். பத்திரிகைக் காரணுக ஆண்டு மலரு தீபாவளி மலரு. சுதந்திர மலரு பொங்கல் மலருன்னு எழவெடுப்பாங்க. அப்போல்லாம் நம்ம உசிரை வாங்குவானுக. அப்பப்போ கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். அந்த வேலையும் உனக்குத்தான். என்ன. தெரியுதா?" -

இளையபெருமாள் வெறுமனே தலையாட்டினான்.

"நான் செய்கிற பிரசங்கங்களைக் குறிப்பெடுத்து வந்து, பிறகு விரிவாக எழுதித்தரணும். சில சமயம் எனக்காக நீயே புத்தகம் எழுதவேண்டிய அவசியம் கூட ஏற்படலாம். அதாவது நீ எழுதவேண்டியது. ஆசிரியர் என்கிற இடத்திலே நம்ம பேரு இருக்கும். இன்னும் பல அலுவல்கள் இருக்கும். அதை எல்லாம் அவ்வப்போது சொல்வேன் என அருள் புரிந்தார் அறம்வளர்த்தார்.

அவராகச் சொல்வார் என்று எதிர்பார்த்து ஏமாந்த இளையபெருமாள், "சம்பளம் எவ்வளவு தருவீர்கள்?" என்று கேட்டான். -

"சம்பளமா?" என்று தலையைச் சொறிந்தார் தலைவர். "சம்பளமா" என்று மோவாயைத் தடவினார். "எழுபத்தஞ்சு" என்றார். "எழுபத்தஞ்சு போதாது?" என்றும் கேட்டார், ஏதோ பெருந்தொகையை வாக்களித்துவிட்டவர் போல. -

இளையபெருமாள் வறட்டுச் சிரிப்பு சிரித்தான். "உங்கள் காரியதரிசியாகப் பணி புரிவதற்கு இது மிகவும் சொல்பமான சம்பளம் ஸ்ார். இது காணாது என்றான்.