பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன். تنقية சாவித்திரி அடுப்பங்கரைக்குப் போனவள் ஐய்யோ என்று கூவதற்கு வாயெடுத்தாள். உடனடியாகவே, தனக்குத் தானே கட்டுப்பாடு விதித்து, ஓங்கிவந்த ஒலத்தை அமுக்கிக் கொன்றுவிட்டாள். அவள் சிரத்தையோடு தயாரித்து வைத்திருந்த பால் பாயசத்தை, கறுப்புப் பூனை ஒன்று - "அதுக்கு இழவெடுக்க இந்த வீட்டிலே அசந்து மறந்து ஒரு சாமானைத் திறந்து போட்டுவிட்டுப் போக வழியில்லே - சுவாரஸ்யமாக ருசிபார்த்துக் கொண்டிருப்பதைக் காணும்போது "சபாஷ்டா பாண்டியா" என்று பாராட்டும் மன எழுச்சியா சாவித்திரிக்கு உண்டாக முடியும்? தன் வயிற்றெரிச் சலையும் வசவு வேகத்தையும் அவள் ஒடுக்கிவிட முயன்றதன் காரணம், "விருந்தாளிகள் பசியுடன் காத்திருக்கிறார்கள் விருந்து வெற்றிகரமாக நிகழ வேண்டுமே" எனும நினைப்புத்தான்.

பூனை தலைநிமிர்ந்து பார்த்தது. மீசை மயிரைச் சரிசெய்துகொள்வது போல் நாக்கினால் அப்படியும் இப்படியும் தடவிக்கொண்டது. "பாயசம் பலே, ஜோர்" என்று சொல்வது போல் அவள் பக்கம் பார்த்துக் கண்களைச் சிமிட்டி, "மியூவ்" என்று மென்குரல் கொடுத்துவிட்டு, ஒய்யார நடை நடந்து சென்றது.

இன்னொரு சமயமாக இருந்திருக்குமேயானால், சாவித்திர் சும்மா பொம்மை மாதிரி நின்றிருக்கமாட்டாள். தாளிதச் சட்டியில் போடப்பட்ட கடுகுகள் மாதிரி சூடான வார்த்தைகள் வெடித்துச் சிதறும் அவள் வாயிலிருந்து. அவள் கை வெறும் விறகுக் கட்டையையோ அல்லது கேவலம் துடைப்பக் கட்டையையோ அந்தப் பூனைமீது "அது நாசமாய்ப் போக அதுக்குச் சாவு வரமாட்டேன்கிறதே! - விசி அடித்திருப்பாள்.

இப்பொழுதோ, விருந்தாளிகள் வந்து காத்திருக்கிறார்கள். பெரிய தனமும், ராங்கியும் பெற்ற "ராணிகள்" அவர்கள் அவர்களின் மதிப்பையும் பாராட்டுதலையும் பெற ஆசைப்படும் சாவித்திரி முட்டாள் தனமாகக் காரியம் செய்யத் துணிவாளா என்ன?

ஆகவே விருந்து ஜாம்ஜாமென்று நடந்தது. பால் பாயாசத்தோடுதான். அறியாத்தனமாக ஒரு பூனை - அதுக்குட் பாடைகுலைய அதுக்கு வாந்திபேதி வர வாய் வைத்துவிட்டது என்பதற்காக, ஒரு சட்டி பாயாசத்தையும் கழுநீர்த் தொட்டியிலே கொட்டிவிட மனம் வருமாபின்னே?