பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 薩 ; H3 சாகாது என்பாக ஆனால் இந்தப் பூனை-இதனுடைய ஒன்பது ஆயுகம் முன்னாலேயே தீர்ந்து போச்சோ என்னவோ இது பத்தாவது ஆயுசாக இருக்குமோ என்னவோ!-செத்தே போச்சு. இதிலே ஒரு அதிசயம் பாரு, அது உடம்பிலே காயம் பட்டதாகவே தெரியலே. பூனை செத்துப்போன உடனேயே உன்கிட்டே அறிவித்துவிடலாம்னு எட்டிப் பார்த்தேன். ஏதோ விருந்து நடந்துதா? அப்ப வந்து இந்த விஷயத்தைச் சொல்வானேன்னு நினைச்சு பூனையை எடுத்து உங்க, வீட்டுத் தோட்டத்திலே படுக்கப்போட்டேன்." -

'உன் பண்பாட்டிலே இடி விழ!" என்று வாழ்த்தியது சாவித்திரியின் உள்ளம் பரவால்லே மாமி. இப்ப அதனாலே என்ன என்றது அவள் வாய். -

இந்த உரையாடலைக் கேட்டு நின்ற டாக்டர் சிரித்துக்கொண்டார். "இப்போ உங்களுக்கு எல்லாம் தெளிவாகியிருக்கும். இல்லையா' என்றார். - - -

சாவித்திரி வெட்கத்தோடு தலை அசைத்தாள்.

"வியாதியால் சாகிறவர்களைவிட, மனம் சிருஷ்டிக்கிற பீதியினால் பாதிக்கப்படுகிறவர்கள் தொகை அதிகமானது. உண்மையான நோய் செய்கிற அழிவைவிட நோய் எனும் நினைப்பு செய்கிற சேதம்தான் மிகவும் பயங்கரமானது. புலியைவிடக் கிலி அதிக சக்திபெற்றது. உணவிலே விஷம் கலந்திருக்கும் என்ற பயம்தான் உங்கள் சிநேகிதிகளுக்குக் கோளாறை உண்டாக்கியதே தவிர, விஷம் எதுவுமில்ல. மனிதருக்கு வாய்த்திருக்கிற மனசே ஒரு பெரிய கோளாறுதான்."

டாக்டர் தமது அறிவின் விசாலத் தன்மையை அம்பலப்படுத்த முயன்றார். - -

"ரொம்ப தேங்க்ஸ் லார்" என்று கூறி அவரை அனுப்பி

வைப்பதில் ஆர்வம் காட்டினாள் சாவித்திரி. எப்பொழுதும்

எதிலும்-எதற்கெடுத்தாலும் அவசரம் என்பது அவள் குணவிசேஷங்

களில் ஒன்றாகும்

k