பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 器 蠶 15 கார்கள், மோட்ட்ார் பைக் லேம்பிரட்டா, சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா நாகரிக வேகத்தில் சிக்கி அவதியுறுகிற மனித ஜாதியின் அவசரத்துடிப்புக்கு ஈடு கொடுப்பதற்காக ஏற்பட்டவிதம் விதமான இரும்பு அவதாரங்களையும், அவற்றிலே ஹாயாக சவாரி செய்த ஆண் பெண்களையும் அவர் கண்கள் ஆராய்ந்து கொண்டிருந்தன. வேகமாகவும், அவசரமற்ற கதியிலும், நடந்து சென்றவர்களையும் அவர் கவனிக்கத்தான் செய்தார்.

நாகரிகம் அழகோடும் அலங்காரத்தோடும், பகட்டோடும் மேனாமினுக்கித் தனத்தோடும் புரண்டு கொண்டிருந்த இடம் அது நகரத்துக்குப் பெருமை தந்த கடற்கரையை ஒட்டிய அழகிய ரஸ்தா. அது ஜீவனோடும் பூரணப் பொலிவுடனும் திகழ்கிற நேரம் அப்பொழுது, . - - -

எவ்வளவு மனிதர்கள் எத்தனை எத்தனை ரகங்கள் எவ்வளவு மொழி பேதங்கள் - ஞானப்பிரகாசம் தன்முன்னால் மெதுவாகவும் வேகமாகவும் இயங்கிக் கொண்டிருந்த மனித ஓட்டத்தைக் கவனித்துப் பெரு மூச்சு விட்டார். - - " - -

இந்த ஜனசமுத்திரத்திடையே நான் ஒரு ஒற்றைத் தீவு மாதிரி அசைகின்ற இம் மனித நதியின்மத்தியிலே தனித்து நிற்கும் மணல் திட்டு மாதிரித் தான் நானும்!

அவரைக் கவனியாமல்-அவரைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாதவர்களாய் - எல்லோரும் போய்க்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் வேடிக்கை பார்த்தபடி சோம்பி இருப்பதிலே சுகம் கண்டார் அவர் -

தன்னை மறப்பதற்கு தனது வேதனைகளை மறப்பதற்கு ஒவ்வொருவனுக்கும் ஒரு போதைச் சரக்கு தேவை. தன்னிலே தானே ஆகி, தன்னைப் பல்வேறு கூறுகளிட்டு விநியோகிப்பது போல், ஆக்குதல் தொழிலில் ஈடுபடுகிறவனுக்கு உள்ளத்து வேதனை அதிகம்தான். அவற்றை மறப்பதற்காக அவன் உலகத்தை வேடிக்கை கான் முற்படுகிறான். -

ஞானப்பிரகாசம். ஜனசமுத்திரத்தின் மத்தியிலே வசித்த போதிலும் தன்னந்தனியனாகிவிட்டது போலவே உணர்ந்து வந்தார்.