பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஜ ஐ இரண்டு பாபிகள் அவருடைய இன்பங்களில் பங்குகொள்ளக் காத்திருக்கும் துணை யாரும் இல்லை. துயரங்களைப் பகிர்ந்து ஆறுதல் கூறுவதற்கும் எவருமில்லை. கனவுகளை, ஆசைகளை, ஏக்கங்களை, இதயத் துடிப்புகளை எல்லாம் கேட்டு ரசிப்பதற்கோ-அல்லது பொறுமையோடு கேட்டுச் சகித்துக் கொள்வதற்கோ-ஒருவர்கூட இல்லை.

அவர் தனியன். உள்ளத்திலே தனிமை வேதனையாய், பெருஞ்சுமையாய், கோடையின் கடும் உஷ்ணமாய், கவிந்து கனத்துக் கிடந்தது.

அந்த வேதனையைத் தணித்துக் கொள்வதற்காகவே-சுமையை இறக்கி வைக்கவே-உஷ்ணத்துக்கு மாற்றாகக் குளுமை பெறத்தான் அவர் நாகரிகம் மிதந்து செல்லும் பெரிய ரஸ்தாவின் ஒரத்தில் உட்கார்ந்திருந்தார்.

காலத்தைப் பற்றி அவருக்குக் கவலை கிடையாது. உறுத்துகின்ற கடமை உணர்வு எதுவும் அவருக்கு இல்லை.

விண்ணில், பொன்வெயிலில், பூத்தொகுப்பில் இன்பமாய் நீந்தும் பாக்கியம் பெறவிருக்கும் வண்ணாத்திப் பூச்சியாகப் பரிணமிக்கப் போகிற உணர்வு உள்ளுர இருந்தோ-இல்லாமலோ, குட்டிப் புழு ஒய்வு ஒழிவு இன்றி இலைகளை அரித்துத் தின்று தின்று வளர்கிறது. பிறகு துங்குகிறது. புதுமைகளைச் சிருஷ்டிக்கின்ற சிந்தனைத் திறனும ஓயாது அரித்துக் கொண்டிருக்கும் புழு மாதிரித்தான். அதற்கும் துக்கம் தேவைதான். ஆனால் அது துங்குவது இல்லை. தன்னைப்பற்றி எண்ணுவது அதைப் பற்றக்கூடிய ஒரு நோய் என்றே எனக்குத் தோன்றுகிறது. -

ஞானப்பிரகாசத்தின் பார்வையில் தம்மிலே தாமே ஆகிவிட்ட சூழ்நிலை மறந்து தங்கள் தனி இன்பத்திலே சொக்கிப்போன இரண்டு பேர் தென்பட்டார்கள். ஒடிக்கொண்டிருந்த லேம்பிரட்டாவில் இருந்த ஒருவனும் ஒருத்தியும், முன்னாலிருந்த அவன் தோள்களில் கையை சொகுசாகப் போட்டுக்கொண்டு, பின்னால் ஒய்யாரமாக அமர்ந்திருந்த அவள் முகம் மகிழ்ச்சியினால் முழுதும் மலர்ந்து திகழ்ந்தது. அத்தோற்றம் அழகாக விளங்கியது. அவன் சந்தோஷமாக என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். வாகனம் வேகமாக ஓடியது.

அவர்களும் தம்மிலே தாமே ஆகிவிட்ட தனியர்தான். ஆயினும், அவனுக்கு அவள் துணை. அவர்கள் எப்பொழுதாவது