பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#18 蠶 இரண்டு பாபிகள் விளக்கு இருளின் ஆழத்திலே எதையோ நழுவ விட்டுவிட்டு ஏதோ ஒரு சக்தி மாய ஒளிக்கரம் நீட்டித் தடவித் தேடுகிறது" என்று நினைத்தார் அவர். அப்புறம் நினைப்பு எதுவுமற்றுச் சும்மா கிடக்க முயன்றார்.

எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியாது. அவருக்கு அருகே மிகச் சமீபத்தில் - பெண் வாடை வீசியது. அவர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். அவள் தான். ஆணுக்கு வலைவீசி அலையும் பண்பு பெற்று விட்ட பெண் தான். அவளை அவர் எவ்வளவோ நாட்களாகக் கவனித்திருக்கிறாரே அவளை இனம் கண்டு கொள்வது கஷ்டமில்லை தான். . -

அவருக்குச் சிரிப்பு வந்தது. அவள் ஏமாறப் போவதை எண்ணித்தான்! .

அவர் அவளையே பார்த்தபடி இருந்தார். அவள் அவரையே கவனித்தபடி நின்றாள். இரவருக்குமிடையே மெளனம் தூங்கிக் கிடந்தது.

எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? "என்ன?" என்று கேட்டார் அவர், . - -

அக் கேள்விக்குப் பதிலாக வெறும் ஒலிக்குறிப்பு காட்டிச் சிரிக்கும் சிறு பெண் போல அவளும் "தொன்னெ" என்றாள். களுக்கென நகைத்தாள்.

"பாயசம் வாங்கிச் சாப்பிடுவது தானே என்று அலட்சியமான ஒரு பதில் கிடைக்கும் என அவள் எதிர் பார்க்கவில்லை. ஊங்?" என்றாள்.

"என்ன என்றேன். தொன்னை என்றாய். தொன்னை பாயாசமோ, ரசமோ வாங்கிக் கொள்ள உபயோகப்படுவது தானே? 爵 பாயாசமே வாங்கிக் கொள்ளலாம். அது தான் இனிக்கும்" என்று அவர் பேசினார். நீண்ட கால மெளனத்துக்குப் பிறகு யாரிடமாவது விளையாட்டாகப் பேச வேண்டும் போல் இருந்தது அவருக்கு. -

அவள் சிரித்தாள். அங்கேயே உட்கார்ந்து விட்டாள். "என்னிடம் காசு இல்லையே' என்றாள்.

"இதுவுமதே.அல்லது இஃதும் அஃதே T75