பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


. வல்லிக்கண்ணன் _ঞ্জ_ঞ্জি__° உங்கள் பேச்சு எனக்குப் புரியலியே என்று அவள் சொன்னாள். "அது ரொம்பப் பேருக்குப் புரியாது என்ற உண்மை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அதனால் தான் நான் அதிகமாகப் பேசுவதில்லை!" . х

"நீங்கள் கதை எழுதுகிறவரா?" . . "உனக்கு எப்படித் தெரிந்தது. என்று ஆச்சரியப்பட்டார் ஞா.பி. "கதை எழுதுகிறேன். காரணத்தை எழுதுகிறேன்னு அலைகிறவங்க தான் இப்படி யெல்லாம் உளறிக்கிட்டிருப்பாங்க" எனும் பதிலை அவளிடமிருந்து அவர் எதிர்பாக்க வில்லைதான்.

"பரவால்லியே, உனது அனுபவம் அகண்டமானது. ஆழமானது என்று தான் தோன்றுகிறது" என்றார் அவர்

அவள் பெருமூச்செறிந்தாள்.

எங்கோ போயிருந்த மெளனம் மீண்டும் ஓடிவந்து அவர்களுக்கிடையே உட்கார்ந்து கொண்டது.

அந்நிலைமை சகிக்க முடியாததாக் இருந்தது அவருக்கு "ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்? வேறு யாரையாவது தேடிப் போ. உனக்கு பணம் தானே குறி? என்னிடம் பணமே கிடையாது. அள்ள அள்ள வற்றாது கொடுத்து வந்த அமுத சுரபி மாதிரி பணச்சுரபி ஏதாவது கிடைக்காதா என்று தான் நானும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன். . . . . . . . . .

தலைகுனிந்து உட்கார்ந்திருந்த அவள் அழுகிறாள் என்று புரிந்தது. ஏன் ஏன் என்று பதைத்தது அவர் உள்ளம். - "நீ ஏன் இங்குவந்து அழவேண்டும்? அழுவதற்கு வீட்டு மூலையோ, தெய்வச் சிலையோ அகப்படவில்லையா உனக்கு?" என்றார் அவர் பிறகு ஏன் இப்படிப் பேசினோம் என்ற வருத்தம் ஏற்பட்டது அவருக்கு. -

அவள் விம்மி விம்மி அழுதாள். மனப்புழுக்கம் தீரும் வரை அவள் அழுது தீர்க்கட்டும் என எண்ணி அவர் சும்மா இருந்துவிட்டார்.