பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜ ஐ இரண்டு பாபிகள் ...

"உங்களைப் பார்க்கும் போதெல்லாம், பாவம் செய்யத் தெரியாத சாதுக் குழந்தை என்று அல்லவா நான் எண்ணினேன்' என்றாள். அவர் ஒன்றுமே சொல்லவில்லை.

“உங்கள் அருகே இவ்வளவு நேரம் இருந்ததில் எனக்கு எவ்வளவோ சந்தோஷம் ஏற்பட்டுவிட்டது. உங்களோடு பேசியதில் எனக்கு எவ்வளவோ வேதனை கரைந்தது போலிருக்கிறது. உங்களிடம் எனக்கு மரியாதையும் அன்பும் ஏற்பட்டுவிட்டன. உங்களை நான் எத்தனையோ தினங்களாகக் கவனித்து ந்திருக்கிறேன். இன்று தான் உங்கள் அருகில்வர எனக்குத் துணிவு

مغني

to:

ဖွံ့ႏိုင္လို႕ பிறந்தது."

அவள் பேசிக்கொண்டே இருந்தாள். அவருக்கும் அது புதிய அனுபவமாகத்தான் இருந்தது. - -

அன்றுவரை இருட்டில்-தனிமையில் அவர் அருகே அமர்ந்து

எந்தப் பெண்ணும் பேசியதில்லை. எவளும் அழுததில்லை.

o

ருத்திகூட முணுமுணுத்ததில்லை. ஒரு பெண்ணும் சிரித்ததில்லை.

ళపై

.சாமிப்பியம் அவருக்கு இதமாக இருந்தது" للtسانقهG5)له پري . இனிமை தந்தது. குளுமை புகட்டியது. உள நிறைவு கொடுத்தது அவரை வதைத்த தனிமை எனும் கொடு நோய்க்குஅவளே ஒரு மருந்தாக வந்து சேர்ந்திருந்தாள். அது அவளுக்குத் தெரியாது.

நான் உன்னை மதிக்கிறேன். நான் உன்னைப் போற்றுகிறேன். உனக்கு நான் நன்றி கூறுகிறேன்.

ஏதோ வேத வாக்கியத்தை உருப் போடுவதுபோல அவர் உள்ளம் ஜெபித்துக் கொண்டிருந்தது.

ஏசுமுனி மரியா மகதலேனாளை மதித்ததுபோல, புத்தன் ஆம்ரபாலியை கெளரவித்தது போல உபகுப்தன் வாசவத்தத்தைக்கு

"சரி, நேரமாகிவிட்டது. நான் போய்வருகிறேன். எப்பொழுதாவது இத்தகைய பாக்யம்கிடைக்க நீங்கள் அருள் புரிவீர்கள் என்று நம்புகிறேன். ஊம்? மறுக்க மாட்டீர்களே?" -

"நீங்கள் தான்." என்று அவர் உதடுகள் வரை வந்துவிட்டது வார்த்தை அவர் சமாளித்துக் கொண்டார். "நீ தான் மனமிசைந்து அருள்புரிய வேண்டும்" என்றார்.