பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

பெரிசாக நினைக்கவில்லை, பார்த்தியா சரியானபடி சீக்கு பார்த்திருந்தால் நான் பிழைத்தாலும் பிழைத்திருப்பேன்" என்று வயிற்றெரிச்சலோடும், உள்ளக் கொதிப்போடும் எண்ணிவிடக் கூடாதே அப்படி ஒரு ஆத்மா குமைந்து குமறுமானால் அந்தக் குலம் ஏழேழு தலைமுறைக்கும் துலங்காமல் போய்விடுமே என்றுதான் அந்த அம்மாள் கருதினாள். பக்தி விசுவாசம்- பாவ புண்ணிய பயம் முதலியன பெற்றிருந்த உத்தமி அவள்

பூரீமான் பால்வண்ணம் பிள்ளையின் உள்ளக் குகையில் ஒரு மூலையில் அந்த உணர்வு "நாம் பிழைக்க மாட்டோமோ" எனும் பயத்தில் விளைந்த அரிப்பு-பிறந்து பின் கறுத்து கனத்து பேயிருளாய் அடர்ந்து மண்டிக் கிடந்திருக்கவும் கூடும. எனினும் அவர் அதை-தனது உட்கிடக்கையை தன் மனைவிக்குப் புலப்படுத்த வேயில்லை. பாவம் விசாலாட்சி வீணாக அழுது புலம்பி மனம் நொந்து போவாளே பிள்ளை குட்டிகள் வருத்தப்படுமே என்ற "பரோபகார எண்ணம்" அவருக்கு இருந்திருக்கலாம்.

விசாலாட்சி "பணத்தைப் பணம் என்று பாராமல்" அள்ளி அள்ளி வைத்தியனுக்கும். மருந்துக் கடைக்கும். சாமிகளுக்கும். சாமிபேர்சொல்லி வாழும் ஆசாமிகளுக்கும் இறைத்து விடுவாள் என்று தோன்றியதும், பால் வண்ணம் பிள்ளை குறுக்கிட்டார். தலையிட்டுத் தடைசெய்ய வேண்டியது அவசியம் என்று கருதித் தான் அவர் அப்படிச் செய்தார்.

விசாலம் நீ செய்யறது நல்லாயில்லே. எதுக்கு இப்படி எல்லாம் செலவு பண்ணனும்? என்னைத் தரும ஆஸ்பத்திரியிலே கொண்டு போய்ச் சேர்த்துவிடு, அதுதான் உத்தமம் என்ற பிள்ளை சொன்னார்.

"চানা உங்களை நன்றாகக் கவனிக்கலியா? இன்னும் கண் முழிச்சப்பாடு பார்க்கக் காத்திருக்கிறேனே நான் என்று விக்கலோடும் வேதனையோடும் விசாலாட்சி முறையிடத் தொடங்கவும், பிள்ளை அலுத்துக் கொண்டார்.

"இது தான் இந்த வீட்டிலே பெரிய தொல்லை. அட மனுசன் சொல்றானே, அதைக் கேப்போமே என்று கிடையாது."

"ஐயோ ஐயோ, கோயில் மாதிரி நீங்க உங்க மனசிலே குறை இருக்கப்படாது என்று நான் எவ்வளவேர் பாடு படுகிறேனே" எனத் தர்மபத்தினி புலம்பினாள்.