பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வல்லிக்கண்ணன் ಆಷ' 邏 27 ாெண்டிருந்ததாக பிள்ள்ை ஒருவரிடம்கூட வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. எனவே, அவரைக் குஷிப்படுத்தி அவருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது தங்கள் கடமையாகும் என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள்.

விசாலாட்சிகூட அவ்வாறு தான் நம்பினாள். அவள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு. அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். போகிறபோது வெறும் கையோடு போகலாமா என்று எண்ணி, ஆப்பிள் பழங்களும் ஆரஞ்சுப் பழங்களும் வாங்கிக் கொண்டு போனாள்.

முதல்நாள் பால்வண்ணம் பிள்ளை எதுவும் பேசவில்லை. "இதெல்லாம் எதுக்கு?" என்றாரே தவிர, எரிந்துவிழவில்லை.

மறுநாளும் அவள் பழங்கள் வாங்கி வந்தபோது, அவர் முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொண்டு, வீணாக இதை எல்லாம் வாங்கி வருவானேன்?" என்று முனங்கினார். வியாதியின் உக்கிரம் தாங்காமல்தான் கணவன் உஷ்ணமாகப் பேசுகிறார் என்று

எண்ணினாள் பத்தினி அம்மாள்.

மூன்றாம் நாளும் அவள் ஆப்பிள்கள்.ஆரஞ்சு முந்திரிப் பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து நின்றதும் பால்வண்ணம் பிள்ளையின் கோபம் எரிமலையின் அக்கினிக் கொதிப்புபோல் ஆயிற்று வார்த்தைகள் தீக்குழம்பு போலவும் புரண்டு ஓடிவந்தன.

"உனக்கு மூளை என்பது கொஞ்சம்கூடக் கிடையாது. வடம்வருத்தம் இல்லவே. இல்லை. கண்மூடித்தனமாக செலவு செய்துவிட்டு, நீயும் உன் பிள்ளைகளும் நாதியற்று நடுத்தெருவிலேதான் நிற்கப்போlங்க. நான் செத்ததற்குப் பிறகு, நீ பிச்சைதான் எடுப்பாய்" என்றெல்லாம் பொரிந்து தள்ளினார் அவர்

தான் செய்த தீங்கு என்ன என்பதை உணர்ந்துகொள்ளும் திறனற்றவளாய் கண்ணிர் வடித்து, இதயம் நொந்து நின்றாள் விசாலாட்சி பிள்ளைகள் விழித்தபடி நின்றார்கள்.

நான் தான் பழமெல்லாம் வாங்கி வரவேண்டாம் என்றேனே. நீ ஏன் தெண்டத்துக்கு அரை டசன் ஆப்பிளும் அரை டசன் ஆரஞ்சும் வாங்கி வரணும்? ஆப்பிள் பழம் விக்கிற விலையிலே நம்மைப்போல உள்ளவங்க தினசரி வாங்கினால் கட்டுபடி ஆகுமா? நீ ஏன் தினம்