பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன்

அவங்களிடமே திருப்பிக் கொடுப்பதைவிட-நீ இட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போவது நல்லதில்லையா? குழந்தைகளுக்கும் உனக்கும் ஆகுமே" என்று அவர் அறிவித்தார். -

அவள் பதில் பேசவில்லை.

"விசாலம், இனி நான் இங்கே இருக்கிற வரைக்கும் நம்ம குழந்தைகளுக்கு ஆரஞ்சுப்பழம் கிடைத்துக் கொண்டே இருக்கும். நீ கவலைப்படவேண்டாம். அநாவசியமாகக் காசு செலவு பண்ணி எதையும் நீ வாங்கி வரவும் வேண்டாம்" என்றார் பால் வண்ணம் பிள்ளை. தனக்கு ஏற்பட்ட ஆத்ம திருப்தியை ஒலி பரப்புவது போல் நன்றாகச் சிரித்தார் அவர், . .

அவர் முகத்தையே பார்த்தபடி நின்ற விசாலாட்சிக்குத் தன் - அழுகையை அடக்க முடிந்தது; விம்மி வந்த பெருமூச்சை அடக்கமுடியவில்லை.

};