பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


[50-क्ल ब्ल....कि |

உயர்ந்தவன்

"காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்"சாமே! அப்படி யென்றால், அநேக இடங்களில் பாத்திரம் துலக்கியும்.வீடு பெருக்கியும் வயிறு வளர்த்து வந்த பார்வதிக்கு அவள் மகன் ராசா ஆகவும், "துரை'ஆகவும் விளங்கியதில் தவறு இல்லைதானே?

"எல்லோரும் இந்நாட்டு மன்னர்" என்று எண்ணிக்கொள்ள உரிமை பெற்றிருந்த போதிலும், பார்வதி தன் மகனை மன்னன் ஆக்கி மகிழ ஆசைப்பட்டதே இல்லை. வருங்காலத்திலே அவன் ஒரு மந்திரியாகி "ஜெயம் ஜெயம் என்று வாழ்ந்து விடுவான் என்றுகூட அவள் கனவு கண்டது கிடையாது. அவளது கனவு அதிகபட்சமாகப் போயிருந்தால், ஒரு தாசில் உத்தியோகத்தையோ அல்லது கலெக்டர் பதவியையோ தான் தொட்டிருக்கக்கூடும்.

தனது உறைவிடமான கிணற்றில் நாலுதரம் அப்படியும் இப்படியும் தாவிக் குதித்துவிட்டு, "என்ன இருந்தாலும் நீ சொல்கிற கடல் என்கிற விஷயம் இதைவிடப் பெரிசாக இருந்துவிட முடியாது' என்று அடித்துப்பேசிய தவளையின் கண்ணோட்டம்தான் அவளுக்கும் இருந்திருக்க முடியும்.

பார்வதி அம்மாள் படிக்காதவள். பல ஊர்களுக்கும் போய் வந்து அறியாதவள். "கலெக்டர் பிள்ளை' என்று ஜில்லா பூராவும் பெயர் பெற்றுத் திகழ்ந்த ஒருவர் வீட்டில் "வாசல் தெளித்துப் பெருக்கும்" பணி புரிந்தவள். கலெக்டருக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கமுடியும் என்பதைத் தனது கண்ணால் கண்டிருந்தாள் அவள், தாசில் பிள்ளை பெருமையும் அவள் அறிவாள். ஆகவே தன்