பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


|வல்லிக்கண்ணன்

மகன் கலெக்டர் ஆகிவிடுவான் இல்லாவிட்டாலும், தாசில் வேலை பார்த்தே தீருவான் என்று ஆசைப்பயிர் வளர்த்து வந்தாள் அத் தாய்.

காலப்போக்கிலே அவள் கண்ணீரும் செந்நீரும் கொட்டித்தான் தனது ஆசைகளைப் பாதுகாக்க நேர்ந்தது. பெரிய காக்கை தன் குஞ்சு பொன் குஞ்சுதான் என்று எண்ணுவது தவறில்லை. அதற்காக அது "எண்ணியது எண்ணியவாறே எய்திவிடும்" என்று சொல்லமுடியுமா? தாய் யார் யாரையோ சிபாரிசு பிடித்து, "சாமியார் பள்ளிக்கூடத்தில் சம்பளம் இல்லாமலே மகனைப் படிப்பிப்பதற்கு ஏற்பாடு செய்தாள்.

மக்களுக்குக் கல்வி அறிவு புகட்டியே தீருவது எனும் நோக்கத்தோடு "சாமியார்களாக வாழ்ந்து பள்ளிக்கூடம் நடத்தி நல்ல பெயரும் பெறுகிற பாதிரிகள் ஸ்தாப்னத்தின் ஐயாக்கள் கூட பார்வதி மகன் செல்லையாவின் மூளையிலே பாடப் புத்தகத்தில் உள்ள விஷயங்களைப் பதிய வைக்க முடியவில்லை.

"ஸிலபஸி"ல் சேராத விஷயங்கள் எல்லாம் அவன் மூளையில் சுலபமாகவே புகுந்துகொண்டு அவனைப் படாதபடு படுத்தினால், அந்தச் சிறுவன் பாடங்களைக் கற்றுக்கொள்வது எங்கே பரீட்சையில் தேறுவது தான் எப்படி? அரியோன் அரி என்று யாரோ சொல்லிக் கொடுத்தால், அண்ணாவி வீட்டிலே பொரி என்று எவரும் சொல்லி தராமலே கத்துவதற்குக் கற்றுக்கொண்டான் அவன். "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று புத்தகம் சொல்கிற தாக்கும்? அவன் வாய் அதைத்தான் சொல்லவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லையே "வாத்தியார் சாகாரா வயித்தெரிச்சல் தீராதா" என்று தான் அது ராகம்போடும்.

செல்லையா தானும் உருப்பட மாட்டான் மற்றவர்களையும் உருப்பட விடமாட்டான் என்று தெரியவந்ததும் பாதிரி பள்ளிக் கூடத்து ஐந்தாம் வகுப்பு ஐயா பையா நீ இனிப் பள்ளிக்கூடத்துக்கு வரவேண்டாம்" என்று சொல்லிவிட்டார். "கண்டிப்பு - கட்டுப்பாடு - ஒழுங்கு முறை - நல்ல படிப்பு - அருமையான பலன் வகையராக்களுக்குப் பெயர் பெற்றது "சாமியார் பள்ளிக்கூடம்"

இருந்தும் என்ன செய்ய? பார்வதியிடம் நல்ல பெயர் சம்பாதிக்க முடியவில்லை. அதனால், "வாத்தியாராம் வாத்தியாரு! எங்க ராசாவுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க முடியலே அவங்களாலே,