பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s:

சிறுவன் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தான். நம் உயிர் நம்ம கையில் இல்லை" என்ற தவிப்பு அவன் உள்ளத்தில் பதை பதைத்துக் கொண்டிருந்தது. பீதி என்பதன் உயிர்ச்சித்திரமாக மாறியிருந்தது அவன் முகம்.

முடிவில் அவனை வெளியே தூக்கி, கட்டை அவிழ்த்து விட்டதும் அவன் யாருடனும் பேசவில்லை. கும்பலாக நின்று கூவிய பயல்கள் ஒவ்வொருவரும் "செல்லையா தான் முதல்லே கத்தினான்" என்று ஏதோ ஒரு மகா உண்மையை உரைப்பது போல ஒதினார்கள்.

"ஆமா நான் தான் கத்தினேன். நாம் கத்தாவிட்டால் தோப்புக்காரன் அவனை கரைக்குத் தூக்கமாட்டான் என்று எனக்குப் பட்டது. அதனாலேதான் கத்தினேன்" என்றான் அவன்.

"நீ அகப்பட்டுக் கொண்டு முழிச்சிருக்கணும். அப்ப தெரியும்" என்றான் "அனுபவ ஞானம் பெற்றவன்.

"நான் ஏன்டா அகப்படப் போறேன்!” என்று அலட்சியமாக அறிவித்தான் செல்லையா. அந்தப் பையன் அவனோடு சில தினங்கள் வரை பேசாமலிருந்தான். அதைப் பற்றி செல்லையா கவலைப்படவில்லை. -

பொதுவாக, அவன் எதைப் பற்றியுமே கவலைப்படுவது கிடையாது. கவலை வளர்த்து வாழ்ந்த அன்னைக்குக் கூட அவன் ஆறுதல் கூறக் கற்றுவிட்டான். -

"நீ ஏனம்மா கவலைப்படுகிறே? கவலைப்படுவதனாலே என்ன நடக்கப் போகுது? ஒன்றும் நடக்காது என்கிறபோது மனுசன் ஏன் கவலைப்படனும்?" என்று சொல்வான் அவன்.

"அம்மா நீ நிச்சயமாக நம்பலாம். நான் பெரியவன் உயர்ந்தவன். என்று நிரூபிக்கும் படியான காரியம் எதையாவது ன்ன்றாவது செய்யாமலா போகப் போறேன்" என்றும் அவன் கூறுவான்.

ஆனால், பார்வதி மகன் செல்லையா "உருப்படாத பயல்’ என்று தான் ஊர்க்காரர்கள் முடிவுகட்டியிருந்தார்கள். "கழுதை எதுக்கு லாயக்கு? சோத்துக்குக் கேடு பூமிக்குப் பாரம்" என்றும் சொன்னார்கள். "தாயார்க்காரி வேண்டிக்கொண்டதற்கு இணங்க எவராவது பெரிய மனிதர். ஏதாவது மளிகைக் கடையிலோ வேறு எங்கோ சிபாரிசு