பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 靈_靈 செய்து அவனுக்கு வேலை வாங்கிக் கொடுப்பதும். சில தினங்களிலேயே அவன் அந்த வேலையை விட்டு விடுவதுடன், வேலைதேடித் தந்தவர் முகத்தில் "கரியைப் பூசுவதும்" இயல்பாகிவிட்டது. அதனால் அப்புறம் அவனுக்கு உதவி புரிய எந்தப் பெரியவரும் முன்வரவில்லை 'அவன் கெட்டது அவனுடைய அம்மாவினாலேதான். ரொம்பவும் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டாள் அவள் இருக்கிற வரை அவனுக்குக் கவலையா கஸ்டமா?" என்றுதான் பலரும் சொன்னார்கள். "தடிமாடு அவன். தின்னு போட்டு ஊரு சுற்றுவதும் வம்புச் சண்டையைவிலைக்கு வாங்குவதும் தவிர அவன் வேறு என்ன செய்யப் போகிறான்?" என்றார்கள். -

ஒருநாள் அவன் கையில் கயிறு அறுந்த காற்றாடி ஒன்று சிக்கியது. அதற்குக் கயிறு கட்டிப் பறக்கவிடவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. எங்கிருந்தோ கயிறு சம்பாதித்தான். இரண்டு பையன்களையும் துணை சேர்த்துக் கொண்டு பட்டத்தைப் பறக்க விடுவதில் ஈடுபட்டான். -

கனத்தில் "விர்ரென்று' எவ்விப் பாய்ந்தது காற்றாடி பழக்கம் பெற்றிராத செல்லையா முதலில் திணறினாலும் சீக்கிரமே சமாளித்துக்கொண்டான். அவன் டைரக்ட்' செய்த காற்றாடி விண்ணிலே நெளிந்தது நீந்தியது. ஏறி இறங்கியது. சுகமாக மிதந்தது. உயர்ந்து உயர்ந்து சிறு பறவைபோல் திரிந்தது. வர்ணப் புள்ளிபோல் நிலைத்து நின்றது.

செல்லையாவின் உள்ள மும் அளவில்லாத ஆனந்த அனுபவத்திலே சஞ்சரித்துக் கொண்டிருந்தது. அதுவரை அவன் உணர்த்திராத மகிழ்ச்சி அங்கு நிரம்பியது. தனது கவிதா சிருஷ்டியில் சொக்கிவிடுகிற கவிஞன் மாதிரி-தன் கைத்திறனிலே பூரித்துப் போகிற ஒவியன்போல - தன்னுடைய குரலின் ஏற்ற இறக்கங்களில் மெய்மறந்து திளைத்து அற்புத இசை பொழிந்து களிக்கிற சங்கீதக் கலைஞன் போல, அவனும் காற்றாடிவிடும் அனுபவத்தில் ஆழ்ந்து நின்றான். - - w

தினந்தோறும் அதே வேலையாக முனைந்துவிட்டான் அவன். புதிய பட்டங்கள் செய்து பறக்க விடுவதில் அவனுக்கு அதிக உற்சாகம் ஏற்பட்டது. வானவெளியில் தடங்கலற்று. மிதக்கும் வேறு