பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இ ஜூ பிரமை அல்ல அறிவுத் தெளிவு வழக்கம் போல் மிளிரவில்லையா என்ன? அப்படியென்றால் இந்த நிகழ்ச்சிக்கு என்ன விளக்கம் கொடுப்பது, இதைப் புரிந்துகொள்ள முடியாமல் தான் திணறினார் பண்ணையார்.

முதன் முதலில் அது எப்பொழுது எப்படிக் காட்சி அளித்தது என்பது அவருக்கு வெகு நன்றாக ஞாபகமிருந்தது.

அப்பொழுது அந்திவேளை மாடுகள் எல்லாம் தொழுவத்தில் ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ளனவா அவற்றுக்குத் தீவனம் சரியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்று "மேற்பார்வை இட்டுவிட்டுத் திரும்பிக் கொண்டிருநதார் சூரியன் பிள்ளை. திடீரென்று அவர் உடலில் புல்லரிப்பு ஏற்பட்டது. அவருக்கு முன்னால் கறுப்பாக ஏதோ ஒன்று ஓடுவதுபோல் தோன்றியது. அவர் கண்களைக் கசக்கிவிட்டு நன்றாகக் கவனித்தார். அது நின்றும் நகர்ந்தும் முன்னேறி வந்தது. நன்கு வளர்ந்து கொழுத்த காட்டுப் பன்றி அது என்பதை அவர் புரிந்துகொண்டார். எனினும் அவர் உள்ளத்தில் பயம் பரவியது உடல் நடுக்கியது. "சீ என்று காரித்துப்பினார்.

அந்தப் பன்றி-சிற்றானைக் குட்டி மாதிரி இருந்த மிருகம்-நின்று. நிமிர்ந்து பார்த்தது. சிறிய வட்டக் கண்களால் அவரை வெறித்து. நோக்கி, உர்ர்-உர்ர் என்று உறுமியது. பிறகு அவரை அலட்சியப் படுத்திவிட்டு நகர்ந்தது. - -

"இந்தத் தடிப்பண்ணி இங்கே எப்படி வந்தது? நம்ம சுற்று வட்டாரத்திலே இதுமாதிரிப் பண்ணி எதுவும் கிடையாது" என்று எண்ணினார் அவர். -

அந்நேரத்தில் தோட்டத்தில் வேலையாட்கள் யாருமில்லை. எல்லோரும் அன்றைய அலுவல்களை முடித்துவிட்டு, அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். வண்டிக்காரன் மட்டும் இரவு ஏழு மணிக்கு வருவான். வீட்டிலும் யாரும் கிடையாது. பண்ணையாரின் மன்ைவி விசாலாட்சி அம்மாள் "மஞ்சளும் குங்குமமுமாக" போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து சில வருஷங்கள் ஆகிவிட்டன. அவருடைய புத்திர பாக்கியம் பட்டணத்திலே படித்துக் கொண்டிருந்தான். பனைகுடி ஆச்சி என்று பெயர் பெற்ற ஒரு பெரியம்மா பகலில் சாதம் ஆக்கி வைத்துவிட்டுப் போய்விடுவாள். இரவு நேரத்துக்கு வெந்நீர்ப் பழையது தான். காப்பி-டீ என்கிற நாகரிகமெல்லாம் பண்ணையாருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவை