பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

"நீ வந்துட்டியா இதில் அவருக்கு ஏற்பட்ட ஆனந்தம் நன்கு ஒலி செய்தது. "நல்ல வேளை, இப்பவாவது வந்து சேர்ந்தியே! என்ற அர்த்தம் தொனித்தது. "என்ன, சாப்பாடெல்லாம் ஆச்சுதா?" என்று கேட்டுவைத்தார் அவர். பேச வேண்டும்-பேச்சுக் குரலைக் கேட்கவேண்டும்-என்ற துடிப்பு அவருக்கு.

"நீ உள்ளே வரும்பொழுது வாசல் பக்கமாக ஒரு பன்றி போச்சுதா? தடியாய், உயரமாய், கொழு கொழு என்று."

பண்ணையாரின் கேள்வி மாணிக்கத்தின் ஆச்சரிய உணர்வையும் திகைப்பையும் அதிகப்படுத்தியது. "பன்றியா? இங்கே எதுவும் வரலியே, எசமான் என்றான் அவன்.காம்பவுண்டின் கம்பிக் கதவு அடைத்தேதான் கிடந்தது. உள்ளே சிறு நாய்கூட வந்திருக்க முடியாது. எசமான்" என்றும் உறுதியாகச் சொன்னான் அவன்.

"உம், உம்" என்று முனகினார் பண்ணையார். சில தினங்களாகத் தனக்கு நேர்ந்த அனுபவங்களை-தன் வாழ்க்கையில் பூத்துவிட்ட விசித்திரத்தை-பற்றி அவனிடம் சொல்லலாமா, வேண்டாமா என்று யோசித்தார் அவர். பலத்த ஆலோசனைக்குப் பிறகு, மிகுந்த தயக்கத்தின் மீது. அவர் எல்லாவற்றையும் அவனிடம் கூறினார். அவனுடைய அபிப்பிராயத்தை விசாரித்தார்.

"இது ஏவல்தான் எசமான். அதிலே சந்தேகமே வேண்டாம்" என்று அறிவித்தான் மாணிக்கம். ஏவல்" என்கிற மாயத்தைப் பற்றியும் அவன் சொன்னான். கண்ணுக்குப் புலனாகாத சக்தி எதுவோ விட்டெறியக்கூடிய கற்களைப் பற்றியும், திடீர்திடீர் என்று தீப் பற்றி எரிவது போல் தோன்றுவது பற்றியும், ஒருவர் பார்வையில்மட்டும் கோரமான-கொடுமையான-அசிங்கமான விஷயங்கள் பலவும் தென்படக்கூடிய விதம் பற்றியும், இன்னும் பல மர்மங்கள் பற்றியும் அவன் எடுத்துச் சொன்னான். அவருக்கு இப்படித்தான் நேர்ந்தது" "இங்கே எனக்குத் தெரிஞ்ச ஒருவருக்கு இதுமாதிரித்தான்." என்று ஆரம்பித்து. கதை கதையாகச் சொன்னான் அவன். அவற்றில் அநேகம் நம்பக்கூடியனவாகவும், சில நம்ப முடியாதவையாகவும் தொனித்தன. " . . . .

"இப்படியெல்லாம் நடக்குமா. மாணிக்கம்? என்று சந்தேகத்தோடு கேட்டார் பண்ணையார்.