பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


క్ట్ర __ | பத்து நாட்கள் வராதிருந்த பன்றி பதினோராவது நாள் வந்து சேர்ந்தது.

அப்பொழுதும் அந்தி நேரம்தான். ஆட்கள் எல்லோரும் விடை பெற்றுக்கொண்டு போய் விட்டார்கள். மாணிக்கம் மாத்திரம் இருந்தான்.

பண்ண்ையார் தொழுவத்தின் பக்கம் நின்றார். மாணிக்கம் மாடுகளுக்குப் பருத்திக் கொட்டையும் தவிடும் கலந்து வைத்துக் கொண்டிருந்தான், திடீரென்று சூரியன் பிள்ளை "ஏ ஏய், வெந்நி எடு! வாளியை எடு" என்று கத்தினார். பாய்ந்து சென்று ஒரு வாளியில் வெந்நீரை அவசரம் அவசரமாக மொண்டு எடுத்தார்.

"மாணிக்கம், ரெடியா நில்லு, அதோ பண்ணி வருது.நம்ம பக்கமாகத்தான் வருது என்று மெதுவாக-ஆனால் பதட்டத்தோடு கூறினார்.

மாணிக்கம் அங்குமிங்கும் பார்வை எறிந்தான். அவன் கண்ணில் எதுவுமே தென்படவில்லை. அதைச் சொல்ல வாயெடுத்தான் அவன்.

ஆனால், “சத்தம் போடாதேடா முட்டாள்" என்று சீறினார் பண்ணையார், வாளித் தண்ணீரை வேகம்ாக வீசி அடித்தார். இன்ன்ொருதடவை வெந்நீரை அள்ளி வாளியோடு விட்டெறிந்தார். வேகமாகக் குனிந்து செம்பை எடுத்தார். இன்னும் வெந்நீர்

கோதுவதற்காகத்தான்.

"எசமானுக்குப் பைத்தியம் சரியானபடி முத்திவிட்டது" என்றுதான் எண்ணினான் அவரையே கவனித்து நின்ற மாணிக்கம். ஆனால் அவன்கூடத் திடுக்கிட்டுத் திகைப்படைய நேர்ந்தது அதே வேளையிலே. - -

பண்ணையார் வெந்நீரை வாளியோடு விட்டெறியவும், அது பன்றிமீது நன்றாகத் தாக்கியது. கொதிக்கும் நீர் படவும்-வாளியின் தாக்குதலும் சேரவே-பன்றியிடமிருந்து ஒரு அலறல் பிறந்தது. வேதனைக் குரல். மிருகத்தின் கூச்சலாகவும் இல்லாமல் மனித ஒலமாகவும் இல்லாமல் ஆயினும் இரண்டும் ஒன்றிக் கலந்தது போன்ற துயரக் கதறலாக ஒலித்தது அது. சூரியன் பிள்ளையின் உடலை உலுக்கியது. மாணிக்கத்துக்குப் பெருத்த அதிர்ச்சி