பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கண்ணில் படாத| காதல் டெலிபோன் மணி அலறியது.

சோபாவில் சுகமாகக் கிடந்த கானப் பிரியனின் மனம் பதறியது. சில தினங்களாகவே அவருக்கு டெலிபோன் மீது ஒருவித பயம் ஏற்பட்டிருந்தது. அதன் மணிச் சத்தம் அவர் ஆசையைத் துண்டுவதாகவும் இருந்தது.

கானப்பிரியன்-அவர் புகழ் பெற்ற நடிகர் என்பது ரொம்பப் பேருக்குத் தெரிந்திருக்கும்-இதைத் தனது வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ள விசித்திர அனுபவமாகவே கருதினார். அதனால் தான் அவர் அதற்கு முடிவு கட்டிவிடவோ, அல்லது அதை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடவோ விரும்பவில்லை. சுவை மிகுந்த இந்த நாடகம் எப்படிவளர்கிறது என்று தான் பார்க்கலாமே எனும் ஆசை அவருடைய உள் மனசின் அச்சக் குறுகுறுப்பை அமுக்கிவிட்டு மேலோங்கி நின்றது.

இப்பொழுது கூட அப்படித்தான், மணி அலறியதும், "அவள் தான். வேறு யாராக இருக்கமுடியும்? இந்த வேளை கெட்ட வேளையிலே நம்மைக் கூப்பிட்டுப் பேசவிரும்புவது என்று அவரது மனம் முனங்கியது. போனைக் கையில் எடுக்காமலே இருந்துவிடலாமே என்று எண்ணினார் ஒரு கணம். 'நமக்கும் பொழுது போகவேண்டுமல்லவா தமாஷாக இருக்குமே அவள் பேசுவது" என்ற நினைப்பும் எழுந்தது அவருக்கு - அவர் திடமான முடிவுக்கு வருவதற்குள் டெலிபோன் மணி அலறித்தள்ளிவிட்டது. இனியும் காலதாமதம் செய்வது சரியல்ல என்று கருதி அவர் போனை எடுத்தார். ஹல்லோ