பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் படாத காதல்

என்று இயந்திர ரீதியில் குரல் எழுப்பிய வாய், "யாரது?" என்றும் கேட்டு வைத்தது. .

“வணக்கம். நடிகர் ஸார் நான்தான் அழைக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?" - எங்கோ இருந்து வந்த அந்த ஒலித் தொடர் கனவுக்குரல் போல் அவர் காதுகளில் ரீங்காரம் செய்தது.

"தினம் எவ்வளவோ குரல்களைக் கேட்கிறேன். யார் யாரோ கூப்பிடுகிறார்கள். என்னென்னவோ பேசுகிறார்கள், யாரை அல்லது எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிகிறது? என்று லெக்சர் அடித்தார் அவர். -

"ஊம். உங்களுக்கென்ன யோகவான். கானப்பிரியர் என்றால் சும்மா தானா கலை உலக ஜோதி நடிப்பு உலக நட்சத்திரம் ஆகாகா என்று நீட்டி நீட்டிப் பேசியது மறுமுனைக் குரல். :

"நீ யார்? அவசரமாக என்னைக் கூப்பிடுவானேன்? முதலில் அதைச் சொல்லு" கானப் பிரியனின் குரலில் கரகரப்பு தட்டியது.

"உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இன்சுவைக் கீதம் பொழியும் கானப் பிரியர் அவர்களே வாழ்க இன்னுமா என் குரல் உங்களுக்குப் பிடிபடவில்லை?" - .

"தினசரி திடீர் திடீரென்று தொல்லை கொடுக்கத் துணிந்திருக்கிற பீடை சனியன்தரித்திரம் ஏதோ ஒன்று." .

அவள் எரிந்து விழுவாள் அல்லது கோபமாக விலகிவிடுவாள் என்றுதான் கானப்பிரியன் எண்ணினார். ஆனால் அவர் காதில் பாய்ந்த ஒலி அவருக்குத் திகைப்பையே தந்தது.

"கானப்பிரியருக்கு அவசரம் போலும், இராதா பின்னே? கொஞ்சிடக் கோலமயில் ஒருத்தி அருகே காத்திருந்தால், வெறும் பேச்சுப் பேசுகிறவர்கள் மீது."

"நான்சென்ஸ், ஷட் அப்" என்று கத்தினார் அவர் அதனால் கூட அவளது தவறான யூகம் வலுப்பெறுமே அல்லாது கரைந்து போய்விடாது என்ற உணர்வு வரவும் அவர் பேசினார். நீ நினைப்பது தப்பு. இங்கே யாருமே யில்லை, சினிமாவை அதிகம் பார்த்துப் பார்த்து அநேகருடைய மூளையே கெட்டு விட்டதாகத் தோன்றுகிறது.