பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் § கானப்பிரியன் நடிப்புச் சிரிப்பைச் சிதறி வைத்தார்.

குறித்த காலம் வந்தது குறிப்பிட்ட இடம் சேர்ந்தார் கானப்பிரியன். அவர் கண்கள்

புஷ்பத்தைத் தேடும் வண்டுகளாயின. அவள் குறிப்பிட்டிருந்தபடி நீலப்புடவையும் அதற்கேற்ற ஜாக்கெட்டும் ஒய்யாரத் தோற்றமும் ஒயில் நிறைந்த போஸுமாய்க் காத்திருந்த பெண்ணைக் கண்டதும் அவர் திடுக்கிட்டார். "நம் கண்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா?" என்ற ஐயுற்று அவர் தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டார்.

அவள் குறும்பத்தனமாகச் சிரித்து, வணக்கம் அறிவித்தாள்.

அவர் திகைத்துத் திண்டாடி நீயா? நீதான பத்மா? என்று குழறினார். அவர் பார்வை அங்கும் இங்கும் ஓடியது. வேறு யாராவது வந்து காத்திருக்கிறார்களா என்று ஆராய முயன்றது.

அங்கு வேறு எவருமில்லை. அவள் தான் நின்றாள், விஷமச் சிரிப்புடன் அவரைப் பார்த்தபடி

"ஆமாம். இன்னும் என்ன சந்தேகம்? உங்கள் பத்மாவேதான்" என்றாள் அவருக்காகக் காத்திருந்த அவர் மனைவி.

நீ செய்தது குற்றம், பத்மா என்று கண்டிப்புக் குரலில் பேசினார் அவர். - -

இல்லை; போனில் குரலைப் புரிந்து கொள்ளாமல் போனது உங்கள் குற்றம், பொழுது போகட்டுமே என்ற நினைப்பில் நம் விளையாட்டை வளரவிட்டதும் குற்றம். உங்கள் மனைவியான என்னோடு நீங்கள் தாராளமாகச் சிரித்துப் பேசி விளையாட மறந்துவிட்டதும் உங்கள் குற்றம்தான். அதனால் நானாகவே உங்களோடு விளையாட ஆசைப்பட்டேன். அதற்குக்கூட எனக்கு உரிமை கிடையாதா என்ன?" என்று சொல்லிச் சிரித்தாள் பத்மா.

பண்பினால் அவள் என்றுமே குறும்புக்காரிதான்!

>}<