பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 鹽_籃 57 குமைந்தான். "என்னப்பா விஷயம்? இந்தப் பெண்ணைப் பார்த்த பிறகு உனக்கு ஏன் இப்படி ஒரு ஞானோதயம் ஏற்பட்டது?" என்று விசாரித்தேன். -

"இவளை இதற்கு முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன். வேறு எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று ஞாபகம் வரமாட்டேன் என்கிறதே என அங்கலாய்த்தான் அவன்.

"இவள் காலேஜ் படிக்கிறவள் என்று தெரியது. அதனாலே, காலேஜ் முன்போ, ரஸ்தாவிலோ, சினிமா தியேட்டரிலோ நீ பார்த்திருக்கலாம். நீ தான் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆஜராகிவிடும் ஆனந்தன் ஆயிற்றே" என்று நான் சொன்னேன்.

"இடியட் உளராதே nரியஸ் விஷயம்"

"ஒகோ, காதலா கண்ட உடனேயே அட்ராக்ஷன் தானாக்கும்? என்றேன். அவன் எரிந்து விழுந்ததைப் பார்க்கவும், உண்மையிலேயே ஏதோ nரியஸ் விஷயம் தான் என்று நான் ஊகித்துக் கொண்டேன். அப்புறம் நான் அவனைக் கேலி பண்ணவில்லை. -

"அந்தப் பெண் ஆகா-அழகு சுந்தரி ஓகோ ஒய்யாரி என்றெல்லாம் நான் சொல்லமர்ட்டேன். சராசரி உருவம், ஒரு தடவை பார்த்தால் ஒன்பது தடவை பார்க்கும் ஆசையையோ ஒன்பது இன்ட்டு ஒன்பது தடவை எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் துடிப்பையோ தூண்ட முடியாத "ஆவரேஜ்கர்ள்” வயசு என்ன, 20. 21 இருக்கலாம். அவள் குள்ளியும் அல்ல நெட்டச்சியும் அல்ல. தடிச்சியுமல்ல, ஒல்லிச்சியுமல்ல. சகல அம்சங்களிலும் சராசரி ரகம்" தான். அவளுடைய ஆடை அலங்காரத்திலோ, நடை ஒய்யாரத்திலோ அப்படி ஏதாவது அதிவிசேடத் தன்மை இருந்தது கொல் என்று. கேட்டாலோ, அது ஒரு எழவுமில்லை. ஆகவே, கொழுக்கட்டையின் ரசனை உணர்வு மீது எனக்கே சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

"அதன் பிறகு அந்த யுவதியை நான் சில தடவைகள் அதே பாதையில் காண நேர்ந்தது. அதன் மூலம் மகத்தான ஒரு உண்மையை நான் புரிந்து கொள்ள முடிந்தது. நான் புரிந்துகொண்டது மகோமகா உண்மையின் ஒரு துணுக்கு தான் என்பது பின்னர் எனக்கு வெட்ட வெளிச்சமாயிற்று. இப்போதைக்கு இது துங்குக) அந்தப் பெண் கல்லூரிக்கு நடந்தே போனாள். வீட்டுக்குத் திரும்புகிற போதும்