பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

"எனது திடமான மறுப்பு கொழுக்கட்டையின் வெள்ளை முகத்தை போண்டாவின் நிறத்துக்கு மாற்றிவிட்டது. அவனுக்கு எவ்வளவு கோபம் போடா முட்டாள் உன்னிடம் வந்து சொல்ல வந்தேனே' என்று சிடுசிடுத்தான். பிறகு இன்று ராத்திரி என் கூடவா. காட்டுகிறேன்" என்றான்.

"நண்பரே, பம்பாய் நகரத்தின் விபச்சாரவிடுதிகளைப் பற்றி பம்பாயிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில வாரப் பத்திரிகைகள் படங்களோடு பிரசுரித்திருந்த உண்மைகளை நீங்களும் படித்திருக்கக் கூடும். நாகரிகத்தின் மேற்படியில் கோலாகலக் கொலுவிருக்கின்ற இம் மாநகரத்தின் பயங்கரச் சாயைகளாகவும் பாப நிழல்களாகவும் திகழ்கின்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றி பத்திரிகைகளில் எவ்வளவு தான் எழுதிவிட முடியும்? இல்லை, கடிதத்தில் தான் என்ன எழுத முடியும்? அதனால் தான் நான் சொல்கிறேன். வாழ்க்கையின் உண்மைகளைக் கற்க ஆசைப்படுகிறவர்கள் அவசியம் பம்பாய் வந்தாக வேண்டும் என்று.

"அன்றிரவு கொழுக்கட்டை என்னை ஒரு விடுதிக்கு அழைத்துச சென்றான். விடுதித் தலைவியுடன் பேசிய முறையிலிருந்து அவனுக்கும் அந்த இடத்துக்கும் ரொம்ப நாள் பழக்கம் என்பது நன்கு புரிந்தது. பேச்சோடு பேச்சாக அவள் சொன்னாள் இங்கு ஒரு ஸ்டுடன்ட் இருக்கிறாள். கல்லூரியில் படிக்கிற மாணவி என்பதால் கொஞ்சம் மிடுக்காகத் தான் பழகுவாள். அதனால் அவளோடு பொழுது போக்குவதற்கு அநேகருக்குத் தயக்கம் உண்டு. சிலருக்கு பயம் என்று கூடச் சொல்லலாம். ஆனால் அவள் நல்லவள். இப்படிச் சொல்லிவிட்டு அவள் மாணவியை அழைத்தாள். அங்கு வந்து சேர்ந்த பெண்ணைப் பார்த்ததும் நான் திடுக்கிட்டேன் என்று தான் சொல்லவேண்டும். ஆமாம். அவளே தான். வழியோடு போகிற யுவதிதான். -

"கொழுக்கட்டை "டொமட்டோபிராண்டு குட்டி ஒன்றைத் சேர்ந்துகொண்டு தனி அறைக்குப் போய்விட்டான். இந்த அதிசயப் பெண்ணோடு பேசிப் பார்க்கலாமே என்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. அதனால் நான் அவளோடு ஒரு அறை சேர்ந்தேன்.

"தன்னைத் தேர்ந்தெடுத்து.தன்னோடு தனி அறை சேருகிறவன் என்ன எதிாபார்ப்பான் என்பதை உணர்ந்த அலட்சியத்தோடு -