பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஓ ஜ நல்ல காரியம்

எதையும் அல்லது எவரையும் பெரிதாக மதிக்காத அசிரத்தையோடு - தனக்கே உரிய ஒரு கர்வத்தோடு அவள் நின்றாள். நடந்தாள். உட்கார்ந்தாள். சகல காரியங்களையும் சகஜமாகச் செய்தாள்.

"என்னை நீ பார்த்ததில்லையா? பார்த்த நினைவு உனக்கு இல்லையா?" என்று கேட்டேன்.

"இருக்கலாம். அதைப்பற்றி இப்ப என்ன?" என்று மிடுக்காகக் கேட்டாள் அவன்.

"நீ படிக்கிற மாணவி என்று நான் நினைத்தேன்.

"நான் மாணவிதான். படித்துப் பட்டம் பெறுவதுதான் என் லட்சியம்" என்றாள் அவள்.

பின்னே நீ இங்கே இருப்பானேன்? இந்தத் தொழிலில் நீ எப்படி ஈடுபட்டாய்?" -

"இந்த நிலையில் உள்ள எந்தப் பெண்ணிடமும் யாரும் கேட்கத் தவறாத ஒரு கேள்வி இது" என்று சொன்னாள். சற்றே மெளனமாக இருந்தாள். "நான் எப்படி ஈடுபட்டேன் என்றா கேட்கிறீர்கள்? நானாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். படித்துப் பட்டம் பெறவேண்டும். நல்ல நிலைமையில் வாழவேண்டும் என்பது என் லட்சியம். இரண்டுக்கும் பணம் வேண்டுமே? நான் வசதிகளற்ற குடும்பத்தில் பிறந்தவள். படிக்காமல் இருந்தால் என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். பெரிய மனிதர்கள் வீட்டில் வேலைக்காரி ஆக நேரிடலாம், அப்பொழுது மட்டும் என் உடலுக்கும் ஒழுக்கத்துக்கும் களங்கம் ஏற்படாமலா போய்விடும். அல்லது, குடிகாரனோ முரடனோ, கயவனோ எவனோ ஒருவனுக்குப் பெண்டாட்டி ஆக நேரிடலாம். அப்பொழுது என் வாழ்விலே அமைதியும் ஆனந்தமும் வளமும் கிட்டிவிடுமா? நான் படித்து உயர்வது என்று உறுதி செய்தேன். கீழ் வகுப்புகள் வரை உபகாரச் சம்பளத்தில் படித்துவிட முடிந்தது. கல்லூரிப் படிப்புக்குப் பணம் தரக்கூடியவர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. வள்ளல்கள் என்று பெயர்பெற்ற சிலரை அணுகினேன். அவர்கள் என் உடல் உறவை விரும்பினார்கள். சில பெரிய மனிதர்களை நாடினேன். அவர்களின் வைப்பாட்டியாக மாறினால் அவர்கள் பண உதவி செய்வார்கள் என்று புரிந்தது. நான் எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பார்ட்-டைம் அலுவல்கள்