பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வல்லிக்கண்ணன் 輟 靈

ష్రఫ్త

~ 61 கிடைக்குமா என்று பார்த்தேன். அந்த வசதி இந்த நாட்டில் ஏது? பணம் படைத்தவர்களின் கயமைக் குணத்துக்கு இணங்கி அவர்களின் இருட்டு வேலைக்குத் துணைக் கருவியாக மாறி, பிறகு வெளி உலகில் அவர்கள் பெறத் தவிக்கிற புகழ் வெளிச் சத்துக்கு நானும் ஒரு சாதனமாக மாறுவதை விட, இப்படி "உடல் உழைப்பில்" ஈடுபட்டுப் பணம் சம்பாதிப்பது உயர்ந்தது என்று நான் முடிவு செய்தேன். தொழிலில் இறங்கிவிட்டேன்... கிடைப்பதைக் கொண்டு, சிக்கனமாக வாழ்ந்து முன்னேறுகிறேன். விரைவில் வெற்றி பெற்று விடுவேன்" என்று நம்பிக்கையோடும் உறுதியோடும் அவள் பேசினாள்.

"இது பாவம் என்று."

"நான் முடிப்பதற்குள் வெடுக்கெனச் சொன்னாள் அவள் "ளது பாவம்? பணத்துக்கு முதல் பூஜையும் முக்கியத்துவமும் கொடுக்கிற மனித ஜாதியிலே பணம் இல்லாமல் இருப்பது தான் பாவம். வறுமை தான் பாவம். வறுமை தான் மகாப் பெரிய பாவமும் குற்றமும் ஆகும்.இன்னும் சில மாதங்களில் என் படிப்பு முடிகிறது. அதன் பிறகு நான் ஏன் இங்கு வரப்போகிறேன்? எனக்கு நிச்சயமாக ஒரு வேலை கிடைத்துவிடும். படித்த பெண்ணுக்கு-பி.ஏ. பாஸ் செய்துவிடுகிற பெண்ணுக்கு-தானா வேலை கிடைக்காமல் போய்விடும்?" - -

"உன் பெயரை அறிந்து கொள்ளலாமோ?" என்று கேட்டேன்.

"அகல்யா" என்றாள் அவள்.

அவளும் நானும் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டோம் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

"உயரிய முடிவை எய்த நல்லவழி இல்லை என்றாகுமானால், பிறர் தவறு-மோசம் என்று கருதுகிற வழிகளைப் பின்பற்றி காரிய சாதனை பெறுவது பிசகு அல்ல; பாவமும் அல்ல". இவ்வாறு அறிஞர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். மதியூகிகள் வழிகாட்டியும் இருக்கிறார்கள். ஆனால், அவாவிய பலனை அடைந்துவிட்ட பிறகும் மீண்டும் மீண்டும் தவறான பாதையிலேயே போவது தான் குற்றம் ஆகும். நான் கல்வி அறிவு பெற விரும்புகிறேன். படித்தாக வேண்டிய உயரிய நூலை விலை கொடுத்து வாங்க இயலாவிட்டால் கெஞ்சியாசித்துப் பெறு: