பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|66_鬣_靈 காட்டிக் கொடுத்தவன்

தாமோதரனின் பேச்சும் எழுத்தும், உணர்வும் உயிர்ப்பும் உடையனவாகத் திகழ்ந்தன. மக்களின் உள்ளத்தைக் தொட்டான, அங்கு உணர்வு கனலச் செய்தன. அவருடைய செயல்கள் நாட்டிலே விழிப்பு ஏற்படுத்தின. - -

ஆகவே அவா கிளர்ச்சி செய்கிறார் நாட்டின் அமைதியைக் குலைக்கிறார் என்றெல்லாம் குறை கூறியது ஆளும்வர்க்கம். கண் காணித்தது. எச்சரிக்கை விடுத்தது. அவர் தனது பணிகளைத் தொடர்ந்து செய்துவந்ததால், ஆட்சியினர் அவரைச் சிறையில் அடைத்து வைக்க விரும்பினர். அவ்விஷயம் தெரியவந்ததும் அவர் "அஞ்ஞாத வாசம் புகுந்தார். சிறையில் அடைபட்டுக் கிடப்பதைவிட மக்கள் மத்தியில் இருந்து கொண்டு, தான் செயல் புரிவதோடு பிறரையும் செயல் புரியத் தூண்டுவதே சிறந்தது என்பது அவர் கருத்து.

தாமோதரனுக்கு வேண்டியவர்கள் பலர் இருந்தார்கள். அழகான, அருமையான, பாதுகாப்பான இடங்களில் வசித்துவந்தார்கள். அவர்களில் அநேகர் அவரைத் தங்களோடு வந்து வசிக்கும்படி கோரினார்கள். அவரும் ஒவ்வொரு இடத்திலும் கொஞ்ச கொஞ்சகாலம் தங்கியிருக்க இசைந்தார்.

தாமோதரன் நிறைய நிறையப் படித்தவர். மதிப்பு பெற்றவர். என்றாலும் கர்வம்கொள்ளாதவர். எல்லோரிடமும் பழகி, எல்லோரையும் போலவே சாதாரணத் தோற்றத்தில் திரிந்து, சகல அலுவல்களையும் செய்யும் பண்பு பெற்றிருந்தார். அதனால் அவர் தங்கியிருக்கும் இடத்தில் வசிப்பவர்களில் ஒருவராகவே அவரையும் கருதினாாகள். அவரைச் சந்தேகிப்பதற்கோ அல்லது காட்டிக் கொடுப்பதற்கோ காரணமாகக் கூடிய விசேஷத் தன்மைகள் அவரிட்த்திலும் அவரது சூழ்நிலையிலும் இல்லாதவாறு தாமோதரனும் கவனித்துக் கொண்டார். அவருடைய நண்பர்களும் விழிப்புடன் இருந்தார்கள்.

எனினும், சிலருக்குச் சில நண்பர்கள் மீதே சந்தேகம் இருந்தது. 'கேசவன் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று அவர்கள் தாமோதரனிடம் சொல்லவும் தவறவில்லை. "நல்ல நண்பர்களால் ஆபத்து வராது. விரோதிகளினால் ஆபத்து விளையக்கூடும் என்றாலும் அவர்களை நாம் விழிப்புடன் கவனித்துக்