பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

கொண்டிருப்பதனால், எதிர்பாராத விபத்து எதுவும் அவர்களால் ஏற்பட்டு விடாது. நண்பர்கள்போல் நடிக்கிறவர்கள்தான் ஆபத்தானவர்கள்" என்று ஒருவர் கூறினார்.

ஆனால், தாமோதரன் புன்னகை புரிந்தவாறே சொன்னார். "சந்தேகம் என்கிற பூதக்கண்ணாடி கொண்டு கவனிக்கிற மனம் எதையும் சரியாக எண்ட போடத் தவறிவிடுகிறது. அதன் நோக்கில் எல்லாமே கோணல்மாணலாகவோ, குறுகியதாகவோ அல்லது பூதாகாரமாகவோதான் தென்படும்". - -

"எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதில்லையா? கேசவன் கண்காணிப்புக்கு உரிய புள்ளிதான்" என்று மற்றவர்கள் குறிப்பிட்டார்கள். - - -

இன்று-அவருடைய மனநிலை அமைதி இழந்து குழம்பியபோது தாமோதரனுக்கு ஏனோ கேசவனின் நினைப்புதான் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. -

நமக்கு அறிமுகமில்லாத மனிதர் அனைவரும் அயோக் கியர்களே என்று சிலர் எண்ணி விடுகிறார்கள். ஆகவே அவர்கள் பலருடன் பழக விரும்பாமல், கூட்டுக்குள் பதுங்கி வாழும் நத்தை மாதிரி சுயநலக் கூட்டினுள்ளேயே ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.நமக்கு நன்கு அறிமுகமானவர்களிலும் அயோக்கியர்கள் உண்டு என்று நம்பி, தங்களுக்குள்ளேயே சந்தேகித்துக் கொண்டு அவதிப்படுகிறார்கள் அநேகர்.எப்படிப் பார்த்தாலும் மனிதர்கள் மனிதர்களாக வாழக் கற்றுக்கொள்ள வில்லை என்பதுதான் புலனாகிறது" என்று அவர் எண்ணினார்.

"என்ன ஐயா. தீவிரமான யோசனையோ?" என்ற குரல் அவர் கவனத்தைத் திருப்பியது.

அங்கே வந்து நின்றவனைப் பார்த்ததும் அவர் திகைப்படைந்தார். நினைத்தவுடனேயே சைத்தான் எதிரே வந்து நிற்பான் என்பது சரியாக இருக்கிறதே என்றுதான் அவர் மனம் முதலில் நினைத்தது. பிறகு சே! நான் ஏன் கேசவனை சைத்தான் என்று கருத வேண்டும்?" என மனசின் நற்பண்பு கூறியது.

- கேசவின் வழக்கம்போல் பல விஷயங்களை பற்றியும் பேசினான். அவருடைய வேலைத் திட்டங்கள் பற்றியும். அன்று