பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டிக் கொடுத்தவன்

நண்பன் போல் பழகி நாச வேலை செய்துவிட்ட நயவஞ்சகன்தங்களை விட்டுவெகு தூரம் விலகிப் போனவன் அவன் நிரந்தரமாக ஒதுக்கப்பட வேண்டியவனே என்று அவர்கள் தீர்மானித்துச் செயல் புரிந்தார்கள்.

கேசவனுக்கு அந்த நிலைமை சகிக்க முடியாததாக இருந்தது. அவன் யாருக்கு உதவி செய்தானோ அவர்களிடம் சென்றான். திரும்பத் திரும்பச் சென்றான்.

முன்பு அவனைக் கருவியாக்கிக் தாம் பயனடையத் திட்டமிட்டு, அவனை உற்சாகப்படுத்தி வந்த அதிகார வர்க்கத்து அங்கங்கள் தங்கள் காரியம் முடிந்துவிட்டதும் அவனை அலட்சியமாகவே பார்த்தார்கள் என்ன வேணும்? ஏன் தொந்தரவு கொடுக்கிறாய்?" "ஓயாத தொல்லையாகிவிடுவாய் போலிருக்கிறதே" என்றெல்லாம் கடுகடுத்தார்கள்.

அவன் மன ஆறுதல் பெறுவதற்காக, ஊராரின் போக்குப் பற்றி அவர்களிடம் ஒப்பாரி வைக்கத் தொடங்கினால், அவர்கள் சகஜ முறையிலே தடை உத்திரவு' போட்டார்கள். எங்களிடம் சொல்லி என்னப்பா பிரயோசனம்? யாரும் உனக்குக் காயம் ஏற்படுத்தவில்லையே? உன்னை உதைக்கவில்லையே? உன்னைக் கொன்று போடத் திட்டம் வகுக்கவில்லையே? அதற்காக நீ சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு மூக்கால் அழுது வழிகிறாயே! என்று கேலி பேசினார்கள். -

"எல்லாம் உங்களுக்கு உதவி செய்ய இசைந்ததனால் வந்த வினைதானே? என்று அவன் முணங்கினால், "என்ன தம்பி, பூடம் தெரியாமல் சாமி ஆடுறதுக்கு வருகிறே? நீ சம்மாவா உதவி செய்தாய்? முள்ளங்கிப் பத்தை போல ரூபாய் ரூபாயாக எண்ணிக்கொடுத்தோமே நாங்க அதை மறந்துவிட்டாயா?" என்று அவர்கள் உறுமினார்கள்.

"இவர்கள் தொடர்பு எப்பொழுதுமே ஆபத்தானதுதான் என்று உணர்ந்து கொண்டான் அவன். அதனால், அவர்களை ஒதுக்கிவிட்டு அவனாகவே ஒதுங்கிப் போனான். -

இந்த நிலை ஏற்படவும் அவன் செய்த பாவத்தின் நினைவு மேலும் கடுமையாக அவனை வாட்டி வதைத்தது. அவன் உள்ளத்தில்