பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. வல்லிக்கண்ணன் அமைதி இல்லை; ஆனந்தமில்லை. அவன் முகத்தில் மலர்ச்சி பிறக்கவே இல்லை. இருந்த இனிமையும் கருகிவிட்டது. பித்துப் பிடித்தவன் போல் திரியலானான் அவன்.

பாவம் என்றால் என்ன என்றே தெரியாத சிறு குழந்தைகள் கூட அவன் முகத்தைக் கண்டால் அஞ்சி நடுங்கினார்கள். அவன் வருவதைப் பார்த்தாலே ஒடி ஒளிய்லானார்கள். அவன் எங்கு போனாலும், "காட்டிக் கொடுத்தவன்" என்று யாரோ ரகசியக் குரலில் ளவேறு ஒருவருக்குச் சொல்வதை அவன் கேட்க முடிந்தது. கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. -

உண்மையாகவே யாரும் அப்படிச் சொல்லாத வேளைகளில் கூட இடங்களில் கூட காட்டிக் கொடுத்தவன். மனிதத் தன்மை இழந்தவன்" என்று ஒரு குரல் வெறுப்புடன் உச்சரிப்பது போல் அவன் செவிக்குக் கேட்கும். கேட்பதாக நினைப்பான் அவன். அதனால் அங்கும் இங்கும் திரும்பித் திருமபி நோக்குவான். இவ்வாறு..பிறரது புறக்கணிப்புக்கும் தனது மனச் சாட்சியின் நுண்ணிய தீவிரமான கண்காணிப்பும் இடையே அகப்பட்டுத் தவித்த கேசவன் ஒரு நாள் காணாமலே போய்விட்டான்.

அத்ற்காக யாரும் வருத்தப்படவில்லை. "இந்த ஊரைப் பிடித்திருந்த சனியன் ஒடிப்போய் விட்டது. இனி இந்த ஊருக்கு நல்ல காலம்தான்" என்றுகூடச் சொன்னார்கள் சில பேர்.

  1. *