பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


"இப்படிச் செய்ய வேண்டியதுதான். இதென்ன திருட்டுப் புத்தி? நாலனா போனால் போகுது என்று விட்டு விடலாம். இன்னொரு நாளைக்கு இந்தப் புள்ளெ வெள்ளிப் பாத்திரம், தங்க நகைகளை எடுத்துக்கிட்டுப் போகாது என்பது என்ன நிச்சயம்?" என்று திடமாகத் தெரிவித்தாள் மீனாட்சி அம்மாள்.

"ஆமாம். நாலணாவை. இந்தப் பிள்ளைதான் எடுத்தது என்று எப்படி நிச்சயமாகச் சொல்லமுடியும்?" என்று கேட்கத் தோன்றவில்லை பார்வதி அம்மாளுக்கு "முளைச்சு மூணு இலை விடலே. அதுக்குள்ள இந்த மூதேவிக்கு மூளைபோற போக்கைப் பாரேன்" என்றுதான் அவள் ஆமோதித்தாள். - - -

இளகிய மனம் பெற்ற மீனாட்சி அம்மாளின் பண்பாட்டுக்கு மிகப் பெரிய உதாரணமாக விளங்கியது ஒரு நிகழ்ச்சி.

வண்டிக்காரன் வயது அதிகமானவன். இருந்தாலும் தனது கடமையை ஒழுங்காகச் செய்து வந்தான் அவன். அவனும் அவனது குடும்பத்தினரும் பெரிய வீட்டின் தோட்டத்து மூலை ஒன்றில் குடிசை அமைத்து வசித்தனர். திடீரென்று கடுமையான ஜூரத்தில் விழுந்தான் வண்டிக்காரன். அவன் குணமடைந்து எழ ஒருமாதம் பிடித்தது. அதற்குள் வேறொரு ஆளை நியமித்து விட்டதால், இனிமேல் அவன் வேலைக்கு வேண்டியதில்லை என்று எசமானியம்மாள் உத்திரவிட்டாள். உடனடியாகவே தோட்டத்துக்குடிசையையும் காலி செய்துவிட்டு அவன் போய்விடி வேண்டும் என்றாள்.

"அம்மா. நான் பிள்ளைக்குட்டிக்காரன். இந்தத் தள்ளாத காலத்திலே நான் எங்கே அம்மா போவேன்? இந்த மூலையிலேயே ஒண்டிக்கிடக்கும்படி தயவுபண்ணுங்க" என்று கும்பிட்டுக் குழைந்து கெஞ்சினான். காலில் விழுந்து வேண்டினான். r ' "

அவனும் அவன் குடும்பத்தினரும் மூலைக் குடிசையில் வசிப்பதனால் பெரியவீட்டு அம்மாளுக்கு நஷ்டம் எதுவும் வந்துவிடாது. எனினும் கொள்கையில் உறுதி வேண்டும் என நம்பிய மீனாட்சி அம்மாள் வேலைக்காரர்களை ஏவி. கிழவனின் சட்டிபானை தட்டு முட்டுச்சாமான்களை எல்லாம் எடுத்து ரோட்டிலே விட்டெறியும்படி கட்டளையிட்டாள். -