பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11

ஒரே ஒரு மனிதன் ஒரு தெரு.

ஒதுக்குப்புறமான தெரு அல்ல. போக்குவரத்து அதிகமாக உள்ள முக்கியமான வீதிகளில் ஒன்றுதான் அது

நாகரிக யுகத்தின் ஜீவத் துடிப்பான வேகம் அந்தத் தெருவிலும் மனித நடமாட்டமாகவும் சைக்கிள்களின் ஒட்டமாகவும், கார் வகையராக்களின் துரித இயக்கமாகவும் பரிணமித்துக்கொண்டு தானிருந்தது.

தெருவின் ஒரு இடத்தில் ஒரு நாய் செத்துக் கிடந்தது.

அது கிடந்த இடம் தெருவின் மத்தியுமல்ல ஒரு ஒரமும் அல்ல. அந்த நாய் நடு வீதியில் காரிலோ வண்டியிலோ அடிப்பட்டு, வேதனையோடு நகர்ந்து நகாந்து தெரு ஓரத்தை அடைய முயற்சித்து அம் முயற்சியிலேயே உயிரை விட்டிருக்க வேண்டும். தெரு நடுவில் அழுத்தமாகப் படிந்திருந்த ரத்தச் சிதறலும், நெடுகிலும் கறையாய் ஓடிக்கிடந்த சுவடும் அப்படித்தான் எடுத்துக் காட்டின.

நாய் எப்படி அடிப்பட்டது எவ்வளவு வேதனை அனுபவித்தது எப்பொழுது செத்தது என்பது எதுவும் யாருக்கும் தெரியாது. அது செத்துக்கிடந்தது. அது எல்லோர் பார்வையிலும் பட்டது. எவர் மனசிலாவது உறுத்தியதா?-தெரியாது

கார்களில் போகிற பெரிய மனிதர்கள் பார்வையில் எல்லாம் பட்டாலும் எதுவும் படாத மாதிரித்தான். அவர்களில் பலர் காரில் ஏறி உட்கார்ந்ததும் தான் சுமக்கிற