பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வல்லிக்கண்ணன் s தனது கூட்டுக்குள்ளேயே ஒடுங்கிவிடும் நத்தை மாதிரி தம்மில் தாமே முடங்கிவிடுவார்கள். பிறகு இறங்க வேண்டிய இடம் வந்ததும்தான் உயிர்ப்பு காட்டுவார்கள். அவர்களுக்குப் புற உலக விஷயங்களில் சிரத்தை எதுவும் இருக்க முடியாது.

தாமே இயங்கும் வேக வாகனங்களில் சவாரி போகிறவர்கள் சாதாரண விஷயங்களைக் கவனிக்க முடியுமா என்ன? தலை போகிற வேகத்திலே பறக்கிற அவர்களே ஏதாவது விபத்தில் மாட்டிக் கொண்டால்தான் "ஒகோ, இதுதான் பூலோகமா" என்ற உணர்ச்சி பிறக்கும் அவர்களுக்கு. -

ஒ. மறந்துவிட்டேனே வேறொரு சந்தர்ப்பத்திலும் உணர்வு பிறக்கும்தான். மினுக்கும அலங்காரத்தோடு அல்லது உறுத்தும் அலங்கோலத்துடன் நவயுக ஜூலியட் அசைந்து நடந்து செல்வதையோ, பஸ் ஸ்டாப்பில் நிற்பதையோ காணும் போதுதான்.

கேவலம் ஒரு நாய் - அதிலும், அடிபட்டுச் செத்த நாய் - பெரும்பாலோர் கண்களை உறுத்தாததில் அதிசயம் எதுவும் இல்லைதான்.

கார்கள் ஒடிக் கொண்டிருந்தன.

"சால மிகுத்துப் பெய்த மனிதச் சுமையைத் தாங்கியவாறு பஸ்கள் போய்வந்துகொண்டுதான் இருந்தன. சைக்கிள்கள். ரிக்ஷாக்கள், வகையரா வகையரா- எதற்கும் குறைவு இல்லை அந்த வீதியிலே. -

5-55 போகிறவர்கள்?

அவர்கள் இல்லாமலா தெரு என்று ஒன்று இருக்க முடியும்? போனார்கள் வந்தார்கள். பலப்பல பண்பினர் அவர்கள்.

"இதென்னய்யா?"

"என்னமோ செத்துக் கிடக்குது

நாய் ஒய்" "காரிலே அடிபட்டிருக்கும். நாய் பெருத்தாப்பிலே என்பது சும்மா

தானா? ஏகப்பட்ட நாய்கள் அதிலே ஒரு நாய் செத்தால் என்ன கெட்டுவிடப் போகிறது?