பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ੋ |

போனார்கள். அவர்கள். நாய் உடல் அப்படியேதான் கிடந்தது.

வெயில் ஏறிக்கொண்டிருந்தது. ஈக்கள் மொய்த்தன. சிறுவர்கள் வேடிக்கையாகப் பார்த்துவிட்டுப் போனார்கள். பெரியவர்கள் பார்த்தார்கள் பாராமலும் போனார்கள். - காற்றடித்தது மழை பெய்தது. இரவு வந்தது போனது.பொழுது விடிந்தது. சூரியன் கடும் வெயில் வீசினான்.

அந்த நாய் உடல் அங்கேயே தான் கிடந்தது. நடந்து போனவர்கள் மூஞ்சியைச் சுளித்தார்கள். சிலர் மூக்கைப் பிடித்துக் கொண்டார்கள். - .

"சே தரித்திரம் தரித்திரம்: "நகரம் வரவர மோசமாகி வருகிறது. ஒரு தெரு கூட சுத்தமாக இல்லை". -

அதிலும் மழை பெய்துவிட்டால் கேட்கவே வேண்டாம் தெரு, பூராவும் ஆபாச மேடுதான்.

இப்படி இருவர்பேசிக்கொண்டு போனார்கள். "நகரசபை தன் கடமையைச் சரிவரச் செய்வதில்லை. பாருமேன் தெருவிலே இப்படியா கிடப்பது?" -

"அப்புறம் அழகு நகரம் எப்படித்தான் அமையுமோ?" தெருக்களை தினம் சுத்தம் செய்வது இல்லை. அழகுபடுத்த பூங்காக்கள் அமைக்கிறார்களாம்!" -

இது ஒரு சம்பாஷணை. அவர்களும் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போனார்கள். தினந்தோறும் அப்படிப் போகத் தயங்கவும் மாட்டார்கள். அந்த நாய் அழுகிக் கிடந்தது அதே இடத்தில் ஒருவர் பார்த்தார், "அசுத்தமே வியாதிக்குக் காரணம்" என்ற போர்டு ஒன்றையும் பார்த்தார். ஏதோ எண்ணம் ஏற்படவே, முகத்திலே சிரிப்பு படர்ந்தது. அவர் வேகமாக முன்னேறினார். ஆபீசுக்குப் போனதும். ஆபீஸ் மேஜையிலிருந்த தாளை எடுத்து, ஆபீஸ் பேனாவினால், ஆபீஸ் மையை உபயோகித்து, "ஆசிரியருக்குக்