பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

உரிமை ;

மனிதர்கள் மிருகங்களாக மாறிக கொண்டிருந்தார்கள்.

இப்படிச் சொல்வது கூடத் தவறுதான் மனிதர்களுக்குள்ளே நித்தியமாய் நிரந்தரமாய் வைகும் மிருக சுபாவம்-குலம், குணம், கல்வி, தர்ம நியாய உணர்வுகள், சமூகக் கட்டுப்பாடு, நாகரிகம், சட்ட பயம் முதலிய வேலிகளினால் ஒடுக்கம்பெற்று, உள்ளத்தி னுள்ளேயே பதுங்கிக் கிடக்கும் இயல்பு-இப்பொழுது கட்டறுத்துக் கொண்டு துள்ளி எழுந்தது: குதித்துக் கும்மாளியிடத் தொடங்கியது; தன்னிச்சையாக வெறியாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. இதுவே கண்ணுக்குப் புலனாகும் உண்மையாக ஊர் பூராவும் பரவி நின்றது. -

முந்திய தினம் வரை-ஏன் உணர்ச்சிகள் குமுறிக் கொதித்துச் சூறையாகச் சுழன்று பின்வெறித் தீயாக வெடிப்பதற்கு ஒரு கணத்துக்கு முந்திகூட-"நன்றாக இருந்தவர்கள்" திடீரென்று தங்களை மறந்தார்கள். உறவையும், ஊரையும் மறந்தார்கள். இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்தார்கள். நிகழ் காலத்திலே எவ்வளவு தீமை புரியமுடியுமோ எத்தனை எத்தனை கொடுமைகள் இயற்ற முடியுமோ-என்ன என்ன அட்டூழியங்கள் செய்ய முடியுமோ, அத்தனையையும்அனைத்தையும் உடனடியாகச் செய்தே தீர்ப்பது என்று துணிந்தவர்களாய், வெறியர்களாய், பித்தராய், பேயராய் சுழன்று கொண்டிருந்தார்கள் அந்த ஊர் மக்களில் ஒரு பகுதியினர்.